பஞ்சாப் மாநிலத்திற்கு பாகிஸ்தானால் அனுப்பிவைக்கப்பட்ட மேலும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
எல்லையில் ஊடுருவிய கைதான தீவிரவாதியிடம் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து அவன் அளித்த தகவலின்படி பஞ்சாப் மாநிலத்தில் விழுந்துக் கிடந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லாத விமானத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்திய எல்லையான அட்டாரியில் விழுந்துக் கிடந்த அந்த டிரோன் விமானம் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளுக்கு பத்து கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு வந்ததாக கருதப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் இதுபோன்ற எட்டு விமானங்களை பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆயுதங்களை இறக்குமதி செய்து விட்டு இந்த ஆளில்லாத விமானங்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றுவிடும்.
ஆனால் பழுதானதால் இந்த குட்டி விமானம் விழுந்து நொறுங்கியதாக பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே ஒரு குட்டி விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது குட்டி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
-athirvu.in