தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கடுமை காட்டும் சந்திரசேகர ராவ், தெலங்கானாவின் டெஸ்மா யுகமா?

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களில் 50,000 பேரில் சுமார் 1,200 பேர் சனிக்கிழமையன்று போராட்டத்தை விடுத்து பணியில் சேர்ந்தனர். இதன் மூலம் மீதியுள்ள 48,800 பேர் பணி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோரிக்கைகள் என்னென்ன?

போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும். பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்

ஊதியத்தில் மாற்றம் செய்யவேண்டும், பணியாளர்களின் உரிமைகளைப் பேணவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், வரி விலக்கு அளிக்கவேண்டும், புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

என்ன சொல்கிறார் சந்திர சேகர ராவ்?

போராட்டதில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சனிக்கிழமையன்று 6 மணிக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என்று தெரிவித்திருந்தார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

“பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. அதேபோல் அவர்கள் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். போக்குவரத்துக் கழகம் 1,200 கோடி ரூபாய் நஷ்டத்திலும், 5.000 கோடி கடனிலும் இருக்கும்போது இவ்வாறு போராட்டம் நடத்துவது மிகப் பெரிய குற்றம். பண்டிகை காலத்தில் இவ்வாறு போராட்டம் நடத்தி மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களிடம் இத்தனை கடுமை ஏன்?

கோரிக்கைகளை முன்வைத்து போராடம் நடத்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கதை தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது.

2002 ஆம் ஆண்டு பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்ந்தது. பலர் கைது செய்யப்பட்டனர்.

1981ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது இந்த எஸ்மா சட்டம்.

எஸ்மா சட்டம் என்றால் என்ன?

போராட்டக் காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை தருகிறது Essential services maintenance act எனப்படும் எஸ்மா சட்டம்,

அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது. -BBC_Tamil

TAGS: