“பசுமாடு, பக்கத்து நாடு, ஜெய் ஸ்ரீராம்,” இவைதான் ஆளும் அரசின் மூன்று கோஷங்கள் எனக் கூறினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
“காஷ்மீருக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல்” என்ற தலைப்பில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் பேரணி நடைபெற்றது.
சிரோன்மணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) முன்னெடுத்த இந்த பேரணியில் தமிழகத்திலிருந்து நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
பேரணிக்குப் பின்பு பிபிசி தமிழிடம் பேசிய சீமான், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்துப் பேசும் நீங்கள், ஏன் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுவதில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
“காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை என்றால் இந்திக்கு மட்டும் ஏன் சிறப்பு அந்தஸ்து” என்றார்.
பிபிசி தமிழின் மு. நியாஸ் அகமதுடனான நேர்காணலில் இந்தி, காஷ்மீர், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரம், மதமாற்றம் எனப் பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
நேர்காணலை விரிவாகக் காண,