பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் ஆதரவாளர்கள் கட்சியின் மத்திய குழு(சிசி)க் கூட்டத்துக்கு முன்னதாக பாஸ் தலைமையகக் கட்டிடத்துக்குமுன் ஒன்று திரண்டனர்.
சுமார் 80 பேரடங்கிய அக்கூட்டம், தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் தலைவரைக் கவிழ்க்க முனைவோருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் கூடியிருப்பதாகக் கூறிக்கொண்டது.
ஹாடிக்கு எதிராகக் காய் நகர்த்துவோரில் முக்கியமானவர் மத்திய குழு உறுப்பினர் ஹட்டா ரம்லி என அக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய குவாந்தான் பாஸ் இளைஞர் தலைவர் பாத்லி இப்ராகிம் கூறினார்.
அந்த ஹாடி- ஆதரவுக் கூட்டம் ‘ஹட்டா பதவி விலகு’, ‘ஹட்டாவையும் அவரின் ஆள்களையும் பதவி நீக்குங்கள் என்று எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
ஒரு அட்டையில், ஹட்டா, பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசா, பாஸ் தேர்தல் இயக்குனர் பாரோல்ராஸி, ஜவாவி ஆகியோரின் படங்களும் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.
நாட்டில் எல்லா சமய சார்புகளும் முழு நேர அரசியலாகும் காலம் வரும். ஹிந்து சங்கம் மரியாமன் கோயில் ஆல் ரெடி …அரசியல் இலாதா சாமியா ? வசூல் இலாத கூட்டமா? பத்து மலை வசூல் எவ்லோ? இந்த முறை ஐயர்கள் எல்லாம் எண்டார்கலாம், நாம் சங்கங்கள் இந்த வசூலில் சங்கமம் ஆவதெப்போ?
இதுதான் அரசியல் கூவம் என்பது.
பதவியை தற்காத்துகொள்ள ஹாஜி ஹாடி யின் ஏற்பாடோ என்னவோ ?