மஇகா அதன் தலைவர் பதவிக்கான தேர்தலை மே மாதம் நடத்த வேண்டும் எனச் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்) உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார்.
மஇகா அதன் கிளைகள், பிரிவுகள், தொகுதிகள், மத்திய தலைமைத்துவம் என எல்லாப் பதவிகளுக்குமே தேர்தல்களை நடத்த வேண்டும். இதைத் திட்டவட்டமாக வலியுறுத்தும் கடிதத்தை ஆர்ஓஎஸ் வெள்ளிக்கிழமையே அனுப்பி விட்டது.
ஒவ்வொன்றுக்கும் எப்போது தேர்தல் நடத்த வேண்டும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவர் தேர்தலை மே மாதம் நடத்தியாக வேண்டும்.
மறுதேர்தல் எல்லாமே ஜூலைக்குள் முடிவடைய வேண்டும் என அஹமட் ஜாஹிட் கூறினார்.
“இந்த உத்தரவுக்கிணங்க நடக்காவிட்டால் பதிவு இரத்தாகலாம்”, என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
உத்தரவு மேல உத்தரவு வருது. ஆனால் ஒன்னும் நடந்தபாடே காணோமே!.
சரியான முடிவை எடுத்திருக்கிரார்ஹல்.
மே மாதம் நடந்தால் என்ன தை மாதம் நடந்தால் என்ன நாம் நம்ம பிழ்ப்பை பார்போம். இவனுங்களை எங்காவது பார்த்தால் காரி துப்புவூம்