டிசம்பர் 28-இல் ஜாவா கடலில் வீழ்ந்த ஏர் ஏசியா QZ8501 விமானத்தில் இருந்த ஒரே மலேசியரான சீ சுங் ஹுவாயின் உடலை நேற்று இந்தோனேசிய அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
சில நாள்களுக்குமுன் அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது என்றாலும் நேற்றுத்தான் அது சீ-இன் உடல் என்பது டிஎன்ஏ சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
அவ்வுடல் நாளை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு புதன்கிழமை அரச மலேசிய ஆகாயப்படை விமானத்தில் சரவாக் கொண்டு செல்லப்படும் என இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதர் ஜாஹ்ரேன் முகம்மட் ஹஷிம் தெரிவித்தார்.