குதப்புணர்ச்சி வழக்கு 2-இல் அரசுத் தரப்புத் தலைமை வழக்குரைஞராக செயல்பட்ட முகம்மட் ஷாபி அப்துல்லா, “ஓர் இளைஞனின் வாழ்க்கையே சிதைந்து போனது” என்பதால் அன்வார் இப்ராகிமுக்குக் கூட்டரசு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை எண்ணி மகிழ்ச்சி அடையவில்லை என்றார்.
“இறுதியில் நீதி கிடைத்திருப்பது எனக்குத் தெரியும். அதனால் முடிவை எண்ணி தொழில்ரீதியில் மனநிறைவு காண்கிறேன்.
“ஆனால், அது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை- ஒரு இளைஞனின் வாழ்க்கையே உருக்குலைந்து போனது, அடியோடு மாறிப்போனது”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வாரால் குதப்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட அவரின் உதவியாளர் சைபுல் புஹாரி அஸ்லான் பற்றித்தான் ஷாபி அவ்வாறு கூறினார்.
ஏழாண்டுக்காலம் நீடித்த வழக்கு விசாரணைகளின்போது அன்வார் நாட்டின் பெயரைக் கெடுப்பதுபோல் நடந்து கொண்டார் எனவும் ஷாபி குற்றஞ்சாட்டினார்.
உனக்கு விரைவில் ஆப்பு இருக்கிறது…. பொறுத்திரு….
நீயே பெரிய முதலை. நீ நீலிக் கண்ணிற் வடிக்கிறாய். சைபுல் வாழ்க்கை எப்படி ஆடம்பரமாக இருக்கும்னு சீக்கிரம் தெரிந்துவிடும். மிகப் பெரிய நாடகத்தை வெற்றிகரமா அரங்கேற்றியதாக நினைக்கிறாய்?
இருட்டு இருட்டு தான்…….
உத்தமனே!, உன்னை யார் என்று அறிந்தவர் அறிவர் உமது உத்தமபுத்திரதனத்தை.
சைபுல் ஒரு பெண்ணா? பாவம்… வாழ்கையே நாசமா போனது.. முட்டாள்… நீதி ஜெயிக்கும்டா ….
ஐயா வக்கீல் அவர்களே நீங்கள் ஜெயிக்கவில்லை.
மனசாட்சி இல்லா ஜென்மங்கள் தர்மத்தைப்பற்றி கவலை கொண்டு அழுகிறதாம்….எல்லாமே நீலிக் கண்ணீர்!!!1