நேற்று பிற்பகல், சுமார் 20 பெர்னாமா டிவி பணியாளர்கள் தங்களுக்குக் கொடுபடாமல் இருக்கும் சம்பளத்துக்குக் கோரிக்கை விடுத்து வங்சா மாஜுவில் அமைதியான முறையில் கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர்.
அவர்கள் கைகளில் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். அதில் ஒன்று ‘Mana Shabery’- தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் ஷபரி சிக் எங்கே என வினவியது.
சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பதால் சுமார் 140 பணியாளர்களை விடுப்பில் செல்லுமாறு பெர்னாமா டிவி கேட்டுக்கொண்டது.
கடைசியாக அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது டிசம்பர் 24-இல்.
பெர்னாமா டிவி, பெர்னாமா டிவி சைனர்ஜி-க்குச் சொந்தமான நிறுவனம். அதில் 33 விழுக்காட்டுப் பங்கை பெர்னாமா வைத்துள்ளது. மிச்சத்தைத் தனியார் பங்குதாரர்கள் வைத்திருக்கிறார்கள்.
இது அம்னோ கூலில் தொகிதி தலைவரூக்கு கொடுத்தது .இது ஒரு அம்நோ பாபா , அலி பாபா , சுஹாய்மி பாபா பாபா நிறுவனம்
‘பிரிம்’ பணம் கிடைத்தவர்கள் அவர்களுக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்கோ!
‘பிரிம்’ என்பது அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கும் லஞ்சம்
அந்த லஞ்ச பணத்தை பெற்ற மக்கள் இவர்களுக்கு லஞ்சம் கொடுக்குனுமா ? லஞ்சத்திற்கு லஞ்சமா ? நக்கலுக்கு நக்கலா ?
பார்த்துங்க அப்புறம் பெர்னாமா டிவிலே பாசமலர் பாட்டை மாற்றி
“எங்களுக்கும் லஞ்சம் வரும் ; லஞ்சம் வந்தால் அனைவரையும் மகிழ வைப்போமே” என்ற பாட்டை மட்டும் ஒளிபரப்பி 2015 ஒட்டிர போறாங்க.