‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’ என்னும் இயக்கத்தை ஏற்பாடு செய்யப்போவதாக அன்வார் இப்ராகிம் குடும்பத்தார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தனர்.
அவ்வியக்கத்துக்கு அன்வார் இப்ராகிமின் இரண்டாவது மகளான நுருல் நுகா தலைமைவகிப்பார். .
“நாங்கள் அவ்வியக்கத்தை வழிநடத்த ஒரு செயலகத்தை அமைத்து அன்வாரின் விடுதலைக்காகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவோம்”, என நுருல் நுகா கூறினார்.
கலங்கிய கண்களுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அன்வாருக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களை ஒன்று திரட்டுவதும் அவ்வியக்கத்தில் அடங்கும் என்றார்.
அப்பில் நீதிமன்றம் அன்வர் குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி என்றால் , அதற்கு பலமுறை ஒத்துழைப்பு கொடுத்த சைபுல் குற்றவாளி இல்லையா ?
ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் ஓர் ஆண் உடல் உறவு வைத்தால் அது கற்பழிப்பு குற்றம் . ஆனால் இருவரும் மனம் ஒத்து இணைந்தால் அது குற்றம் இல்லை.
ஆனால் , சைபுலின் குற்றச்சாற்று தன்னை பலமுறை ……..
அப்படி என்றால் அவர் தன் விருப்பத்துடன் தானே “அது ” நடந்தது . அப்படி என்றால் அவரும் குற்றவாளிதானே ?
உங்கள் முயற்சி வெற்றி பெற நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம். இந்த போராட்டம் நாளைய புத்ரஜெயா வெற்றிக்கு வழி வகுக்கும்.
நடக்காததை நடந்தாக பல காலம் சொல்லி வந்தால் நடந்ததாகவே தோன்றும். அல்தான்துயா வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தூக்கு என்று சொல்லி சொல்லி சம்பந்தம் உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாதவர்கள் போல் சம்பந்தம் எந்த வீட்டில் சம்பந்தம் வைத்திருந்தார் என்று கேட்கிறார்கள்.