உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, அமெரிக்காவில் சூதாட்டக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட பால் புவா வெய் சாங்-குக்கு ஆதரவாகக் கடிதம் எழுதியதன் தொடர்பில் தம்மைப் பற்றிப் பலவாறாகப் பேசப்படுவதை அறிந்தே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“எது ஹலால் எது ஹராம் என்பது எனக்குத் தெரியும். ஒரு கடிதத்துக்காக என்னவெல்லாமோ குற்றம் சுமத்துகிறார்கள்”, என இன்று யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியாவில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றியபோது ஜாஹிட் கூறினார்.
“இதே போன்ற கடிதங்களை மற்ற அமைச்சர்களும் எழுதியிருக்கிறார்கள். அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. . நான் யாரிடமும் சல்லிக் காசுகூட பெற்றதில்லை”, என்றவர் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜாஹிட், மற்ற அமைச்சர்கள் எழுதிய ஆதரவுக் கடிதங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.
“இதைப் பற்றி எழுதி விடாதீர்கள். ஏனென்றால் இதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் போகிறேன்”, என்றார்.
உண்மைதான் காசாக வாங்க இருக்க மாட்டீர்கள் காரணம் மலேசிய காசின் (MYR) மதிப்புதான் அதால பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறதே அதனால் USD-யாக வாங்கி இருப்பீர்கள்.
MYR-யாக வாங்கி இருந்தால் அது “BR1M” என்று கூறிவீர்கள்
USD-யாக வாங்கி இருந்தால் இது “PPBR1M” என்று கூறினாலும்
“BUDAYA RASUAH 1 MALAYSIA” மக்கள் ஏற்று கொள்வார்கள் அறிந்து கொண்டுள்ள அரசியல் கில்லாடியா நீர்.
“BUDAYA RASUAH 1 MALAYSIA” வாழ்க !!! மென்மேலும் வளர்க !!!
Anonymous
“PPBR1M” என்றால் “PAUL PHUA – BR1M” என்று புரிகிறது ஆனால் அமைச்சரின் ஆதரவு கடிதத்திற்காக தனி நபரால் கொடுக்கப்பட்ட லஞ்சமா ? அல்லது உதவி பணமா ? ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டு இருக்கிறோம் எருமைகளாக !!!
முதலில் வரி பணம் ஹலாலா அல்லது ஹராமா இதட்கு இந்த உத்தமன் பதில் சொல்ல முடியுமா ?????