கோத்தா பாருவில் உள்ள சுல்தான் முகம்மட் IV விளையாட்டரங்கில் பாஸ் சிறிது காலத்துக்குமுன் அம்னோவின் “அழிவுக்காக” பிரார்த்தனை செய்ததாம். அதனால்தான் “இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக அங்கு வெள்ளப் பெருக்கு” ஏற்பட்டதாம். சர்ச்சைக்குப் பேர்போன பிஎன் எம்பி பங் மொக்தார் ரடின் இப்படி ஒரு காரணத்தை கூறியுள்ளார்.
“அந்த விளையாட்டரங்கில்தான் அம்னோவின் அழிவுக்காக பிரார்த்தனை நடத்தினீர்கள். நூறாண்டுக் காலமாக விளையாட்டரங்கில் வெள்ளம் ஏற்பட்டதே இல்லை.
“முஸ்லிம்களின் அழிவுக்காக பிரார்த்தனை செய்தீர்கள். அதுதான் விளயாட்டரங்கில் வெள்ளம் பெருகியது”. இன்று நாடாளுமன்றத்தில் பேரரசரின் உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது கினாபாத்தாங்கான் எம்பி இவ்வாறு கூறினார்.
ஓ அப்படியா ? அப்படியானால் நமது அண்டை நாடுகளில் நடைபெறும் “தீவிரவாத” தாக்குதலுக்கு காரணமானவர்களை “போராளிகள்” என்று மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ நீங்கள் ஆதரவு அளித்ததன் பரிசுதான், MH 17 / MH 370 போன்ற நமது நாட்டுக்கு ஏற்பட்ட இரட்டை விமான பேரிடர் என்றும் கூறலாமா ?
உங்கள் கூற்றுப்படி பார்த்தோமேயானால், என்னும் எத்தனை விமானங்களையும் /உயிர்களையும் பலிகடாவாக்க போகிறீர்கள் என்பதை நினைக்கும்போது மனம் நெகிழ்கிறது.
இந்த மாதிரி கிருக்கனுங்கலாம் அமைச்சர்களாக இருந்தால் நம்ப மலேசியா ம்ம்ம்ம் அவ்ளோதான்…
இயற்கை இவன் அப்பன் வீட்டு சொத்தோ ?
எருமைகள் ஜாக்கிரதை .
சத்தியம் தவறாத உத்தமர்களை கேட்டுத்தான் இனி பஞ்சப்பூதங்கலும் ,இயற்கையும் இயங்கும் மா…..ம….யர்கள் அலற்றுதலுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது !
இந்த கபோதி montako குடித்து போதையில் உளறுகிறான் ..
டேய் மடையா…வெறும் பிரார்த்தனை மட்டுமா அல்லது பால்குடம் காவடி என்று ஏதாவது…? கேட்கறவன் கேனையனா இருந்தா MH370. KLIA. லேயே தான் இருக்குன்னு சொல்லுவீங்கடா…!
இனி மழை வராத இடங்களில் அம்னோவின் அழிவுக்காக பிரார்த்தனைச் செய்தால் மழை பெய்யும்! அம்னோவின் அழிவு சக்தி வாய்ந்தது!
மாங்கா மடையன் …..