ஜிஎஸ்டியால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்: சீன வணிகர்களின் கருத்து

chambersசீன  வணிகர்களிடையே  நடத்தப்பட்ட ஓர்  ஆய்வு,  இவ்வாண்டும்  அடுத்த ஆண்டும்  நாட்டின்  பொருளாதாரத்துக்குச் சாதகமாக இரா  என்பதைக்  காண்பிக்கிறது.

மலேசிய  சீன  வர்த்தக, தொழிலியல்  சங்கங்களின்  கூட்டமைப்பு (ஏசிசிசிஐஎம்) நடத்திய  அந்த  ஆய்வு  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)தான்  அதற்குக்  காரணம்  என்கிறது.

ஆனால், 2017-இல்  நிலைமை  மேம்படுமாம்.

புதிய  வரியான  ஜிஎஸ்டி  புதன்கிழமை  அமலுக்கு  வருகிறது.

அந்த  ஆய்வு  2014-இன் இரண்டாம்  பாதி  ஆண்டில்  நடத்தப்பட்டது. ஆய்வில்  கலந்துகொண்டவர்களில்  66.3 விழுக்காட்டினருக்கு 2015-இல்  மலேசியப்  பொருளாதாரம்  பிரகாசமாக  இருக்கும்  என்ற  நம்பிக்கை  இல்லை.