டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரைத் தாக்கிப் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
அவரின் ஆடம்பர வாழ்க்கைமுறை பற்றி மட்டுமே கேள்வி எழுப்பியதாக முன்னாள் பிரதமர் கூறினார்.
“அவர் (மகளின் திருமணத்தின்போது) மலர் அலங்காரத்துக்கு மட்டும் ரிம3 மில்லியன் செலவிட்டதாக வதந்திகள் உலவுகின்றன.
“அது உண்மையாக இருக்கலாம் பொய்யாக இருக்கலாம். ஆனால், மக்கள் பேசுகிறார்கள்.அதுதான் பிரச்னை”, என்றார்.
இன்று காஜாங்கில் ஜெர்மன் -மலேசியக் கழகத்தில் இளைஞர்களும் தேச நிர்மாணிப்பும் என்ற தலைப்பில் உரையாற்றிய பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மகாதீர் மலேசியா அரசியல் வாதிகளை திருத்த ஒரு பல்கலைகழகம் திறக்கலாம் வருசத்துக்கு 2000 மாணவர்கள் தேறுவார்கள். நிர்வாக பொறுப்பை சாமிவேலுவிடம் தரலாம். நிதி பகுதியை மட்டும் எதிகட்சியிடம் தர வேண்டும் ஓகே! முன்பே புத்ரா ஜெயாவில் செய்து இருக்க வேண்டும். எல்லாத்தையும் திருத்தி இருக்கலாம்.
நீர் பிழைக்கத் தெரிந்தவர். எதையும் வெளியில் காட்டாமல் சுருட்டி வைத்துக் கொண்டவர். நம்பிக்கை நாயகனோ, வந்ததும் சரியில்லை, வாயித்தும் சரியில்லை என்ற புராணம் மட்டுமே பாட முடியும். நம்ப ஜனகராஜ் கதைதான். என்ன செய்வது?. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலேன்னு பெரியவர்கள் அனுபவித்துதான் சொல்லி விட்டு போனார்கள்.
இல்லாமல் வருமா?அள்ளாமல் குறையுமா?
இதில் திருமதி ஈஸ்வரனின் ஆலோசனை ஏதும் இருக்குமா