பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரிம2.6 பில்லியன் நிதி அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனத்திலிருந்து வந்த பணம் அல்ல என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கண்டுபிடித்துக் கூறியதை 1எம்டிபி வரவேற்றது.
“எம்ஏசிசி-இன் அறிக்கை 1எம்டிபி-இலிருந்து பணமெதுவும் பிரதமர் கணக்குக்கு மாற்றிவிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
“பிரதமருக்கு பணமெதுவும் கொடுத்ததில்லை என்றுதான் நாங்கள் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறோம். உண்மைதான் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது”, என 1எம்டிபி இன்று காலை ஓர் அறிக்கையில் கூறியது.
இதுதான் உலக அதிசயம்– அரபியன்கள் 2600 மில்லியன் தானமாக இந்த பிரதமனுக்கு கொடுத்தார்களாம் — ஏன் என்று சொல்லவில்லை. இதை நம்புவதற்கு நான் ஒன்றும் அம்நோகாரன் அல்ல– எத்தனையோ ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து இன்னலகளுக்கு ஆளாகியிருந்தும் -அதற்க்கு (முஸ்லிம்களுக்கு) உதவ வில்லை ஆனால் இவனுக்கு 2600 மில்லியன்– எப்படிஎப்படி எல்லாம் கதை கட்டுகிரான்கள்? கொள்ளை அடித்து அடித்து சுகம் கண்டு இதற்காக எல்லாருடைய காதிலும் பூ சுத்துகிறான்கள். கேட்க நாதிஏது? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
அப்படியானால் “1MDB” பணம் எங்கே போனது ?
உலகிலேயே அரசாங்கத்தின் ஆதரவோடு நட்டத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று உள்ளது என்றால் அது மலேசிய அரசாங்கத்தின் நிறுவனமான “1MDB”-தான் என்றால் மிகையாகாது.
சந்தேக் மச்சாம் பூங்கா…படம் முடிந்து விட்டது எல்லோரும் வீட்டுக்கு போங்க.
பொய்யும் பித்தலாட்டமும் தற்காலிகமாக வென்ற மாதிரி தெரிகிறது ,,,உண்மை வெளிவரும் வேளை….. நீங்கள் அனைவரும் வெளிநாட்டு பிரஜையாகிரிபிர் ,,,,
இலஞ்ச ஒழிப்பு உயர்மட்ட அதிகாரிகள் இருவரை விடுப்பில் அனுப்பி விட்டு “உண்மைதான் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது” என்று சொல்வதில் இருந்து, ஏன் அவர்கள் விடுப்பில் போனார்கள் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிவிக்கின்றார்கள் ‘1-MDB’