பிரதமர் நஜிப் அறிவித்துள்ள அரசியல் நிதி விதிமுறைக்களுக்கான ஒரு தேசியக் குழு தேவையற்றது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கருதுகிறார்.
“இது குழுக்கள் அமைப்பது பற்றியதல்ல. ஆகவே, குழுக்கள் அமைக்க வேண்டிய தேவையில்லை.
“அப்படியே (அவர்கள்) அவரை (நஜிப்பை) விசாரித்தாலும், அது தூக்கி எறியப்படும்”, என்று மகாதிர் கூறியதாக த மலேசியன் இன்சைடர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் நிதி என்று கூறப்படும் ரிம2.6 பில்லியன் சம்பந்தமாக கடும் நெருக்கடிக்கு ஆளான பிரதமர் நஜிப் அடுத்த பொதுத் தேர்தலுக்கான அரசியல் நிதியை வழிமுறைப்படுத்துவதற்கான அவரின் புதிய முன்மொழிதல்களை அறிவித்தார்.
இன்று பேராக், செரி இஸ்கந்தார், யூனிவர்சிட்டி டெக்னோலஜி பெட்ரோனாஸில் பேசிய மகாதிர், ஒரு நாட்டின் வெற்றி அல்லது தோல்வி அந்நாடு அதன் கோட்பாடு அமைவுமுறைப்படி நடந்துகொள்வதைப் பொறுத்துள்ளது என்றார்.
கடனில் சிக்கியுள்ள 1எம்டிபி மற்றும் ரிம2.6 பில்லியன் “அரசியல் நிதி” ஆகியவற்றை குறிப்பிடும் வகையில், இது போன்ற பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டிராவிட்டால் அது நாட்டிற்கு அழிவை உண்டாக்கும் என்றாரவர்.
“இது நடக்கும், சரி, அதனாலென்ன என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால்; 40 மில்லியன் இழப்பு, அது ஓகே, எதுவானாலும் அது என் பணம் அல்ல, இதுதான் கலாச்சாரம் என்றால், நாடு அழிந்து போகும்.
“பணத்தை பெற்றுக்கொள்வது ஓகே என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், ஏன் கூடாது…, அதுதான் உங்களுடைய மனப்பாங்கு என்றால், அதன் விளைவாக நீங்கள் வாழும் சமுதாயம் மிக ஏழ்மையான சமுதாயமாக இருக்கும்”, என்று மகாதிர் அவரின் பேச்சை ஆழ்ந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கூறினார்.
காக்காதீர் அவர்களே,நீங்கள் அமைத்த கொர்ப்பாடுகள் அனைத்தும் சக்க போடு போடுதே அது மாதிரியா? உமது தில்லாலங்கடிகள் எல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் மறைத்து வைக்க முடியும் என்று பார்ப்போம்…
நீர் விதத்தை விதை இன்று ஆலமரம உள்ளுது .பவம் உன்னை உடதே !
குட்டை குழப்பி உளற ஆரம்பித்து விட்டான் .
“நஜிப்பின் அரசியல் நிதி திட்டம்: எதற்கு?” ஒருகால் தான் பதவி இழந்து குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது இதர அமுலாக்கா சட்டங்களின் அடிப்படையிலோ குற்றம் சாட்டப் பட்டால் தப்பிக்க வழி வேண்டுமே! அதற்கு முன் எச்சரிக்கையாக இப்பொழுதே “அரசியல் நிதி சட்டம்” ஒன்று நாட்டளுமன்றத்தால் இயற்றப் பட்டால், அதில் அச்சட்டம் அமுலாக்கம் வந்த நாளில் இருந்துதான் செயல் படுத்தப் படும் என்று ஒரு பிரிவைப் போட்டு விட்டால், அதற்கு முன் பெறப்பட்ட அரசியல் நிதி ‘Halal’ ஆகி விடும். அப்புறம் என்ன எந்த சட்டத்தைக் கொண்டும் நம்பிக்கை நாயகனை அசைக்க முடியாது காரணம் இதற்கு முன்னர் இவ்வாறான சட்டம் இல்லை என்பதால் இப்புதிய சட்டத்தில் கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற இயலவில்லை என்று வாதிடலாம். அதேவேளையில், இதர அமுலாக்க சட்டங்களை மீறியிருந்தாலும் அது தன் பதவி பலத்தால் இருட்டடிப்பு செய்து விடலாம் அல்லது புதிதாக நியமிக்கப் பட்டவர் தனக்கு சாதகமாக இருப்பார் என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. சோழியன் குடுமி சும்மா ஆடாது அப்பு.
நன்கொடையும் ஒருவகை ஊழலே என்று ஊழல் தடுப்புச் சட்டம் விளக்கும் வேளையில், 2.6 பில்லியன் நன்கொடை பணம் எப்படி குற்றமற்றதானது என்பதனை ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை!!!!
நீ யார் அதை கேட்பதற்கு? நீ ஒழுங்கானவனா? வெங்காயம்!
இவன்கள் யாவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.