முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மத்திய கிழக்குக் கொடையாளர் ஒருவர் கொடுத்ததாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியனைப் பெற்றுக்கொண்டிருப்பது அந்நியர்கள் அம்னோவில் ஆதிக்கம் செலுத்த இடமளித்து விடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“பிஎன் அரசாங்கத்தின் முதுகெலும்பே அம்னோதான். அம்னோவில் செல்வாக்குடன் இருந்தால் அரசாங்கத்திலும் செல்வாக்கு உண்டு என்றுதான் பொருள்”, என்று ரபிடா தெரிவித்ததாக சினார் ஹரியான் செய்தி கூறிற்று.
அரசியல் நன்கொடை என்று கூறப்படுகிறதே அதன்வழி அரசாங்கம் இப்போது நன்றிக்கடன் பட்டிருக்கிறதா, அதன்வழி வெளியார் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகுமா என்றவர் வினவினார்.
“கேள்வி என்னவென்றால், நன்கொடைக்குக் கைம்மாறாக என்ன ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது? என்ன செய்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டது?
“இவ்வளவு பெரிய தொகையை வாரி வழங்கிய வள்ளல் என்ன எதிர்பார்க்கிறார்?”, எனத் துணிச்சலுக்காக “இரும்பு நங்கை” என்று அழைக்கப்படும் ரபிடா வினவினார்.
நன்கொடைக்குக் கைம்மாறாக நாட்டையே கைம்மாறாக கொடுக்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறாரோ!
அப்படி கேளுங்க அம்மையார்.பதில் எங்கே.
ங்கொய்யால………வந்துட்டா உத்தமி துணிய தூக்கிட்டு மைக்க புடிசிகிட்டு.