காணாமல்போன சட்டத்துறை அலுவலக வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொராய்ஸ், 1எம்டிபி மீதான விசாரணையில் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டவர் அல்லர் என்பதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி இன்று தெளிவுபடுத்தினார்.
“திரு மொராய்ஸ் (இடம்) காணாமல்போனதை போலீஸ் விசாரணை செய்து வருவதால் அது பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
மொராய்ஸ் 2014 ஜூலை 15-இல், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திலிருந்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதையும் அபாண்டி ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.
செஞ்சோற்றுக் கடனுக்கு சேராத இடம் சேர்ந்து பலிகொண்டாயடா கர்ணனா. உன் பழி அவன் ஏற்பானடா கர்ணனா?
1MDB விவகார விசாரணையில் தொடர்பு கொண்டவரோ இல்லையோ, ஒரு சிறந்த அதிகாரி மாயமாய் மறைவது தேசத்துக்கே பேரிழப்பு. இவரை உயிருடன் மீட்பார்களா நமது காவல் துறையினர்??? உயிருடன், நலத்துடன் திரும்ப ஆண்டவனை பிரார்த்திப்போம்!!!!
”நம்பிக்கை நாயகன் அவனை தலைமரைவாக இருக்கும்படி ஆஸ்தெலியா அனுப்பியிருப்பான்.