மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பிரதமர் நஜிப்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க மாட்டார். முதலில் தம்மிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் அதன் பின்னரே அதன்மீது முடிவெடுக்கப்படும் என்றாரவர்.
ஆசியான் அனைத்து நாடாளுமன்றப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் பண்டிகாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை அவர் ஏற்பாரா என வினவியதற்கு நாடாளுமன்றக் கூட்டம் இப்போது நடக்கவிலலை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“நேரம் வரும்போது அது பற்றி முடிவு செய்வேன்”, என்றாரவர்.
கக்குஸ் எல்லாம் சரியாயிடுச்சுல்ல. அப்புறம் வாயைத் திறக்காதே. கம்முன்னு மூடிக்கிட்டு இரு. அடுத்து நாடாளுமன்ற கூரையே பிச்சிக்கிட்டு தலைமேல விழும். அப்ப நிம்மதியா கண்ணைத் திறக்காம இருப்ப. நாங்கெல்லாம் சிரிப்போன்னு சிரிப்போம்.
எல்லாம் வெட்கம் கெட்ட ஈன ஜென்மங்கள்– கொள்ளை அடித்து கொள்ளை அடித்து பழக்கப்பட்டதினால் யார் எது சொன்னாலும் உரைக்காது.
முகத்தைப் பார்த்தாலே தெரியுது உமது நேர்மையின் வண்டவாளம்!!!! மக்களின் எதிர்காலத்துக்காக மக்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை போலும்!!!! நல்லதே நடக்கட்டும்!!!