செப்டம்பர் 16-இல் மலாய் என்ஜிஓ-கள் நடத்தும் பேரணியில் இனவாத வன்செயல்கள் தலையெடுக்காமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது.
மலாய் மானம் காப்பதற்காக நடத்தப்படும் பேரணி என்று அழைக்கப்படும் அதில் வன்செயல்கள் தலையெடுக்கும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பின் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன் கூறினார்.
“எனவே, அதிகாரிகள் விழிப்பாக இருந்து ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்கள் புக்கிட் பிந்தாங், பெட்டாலிங் ஸ்திரிட் போன்றவை என்பதால் ஜூலை மாதம் லவ் யாட் பிளாசாவில் நிகழ்ந்ததைப் போன்ற இனவாதச் சம்பவம் எதுவும் நடப்பதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்”, என்றார்.
காவல் இந்த நாதாரிகளுடன் சேர்ந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவத்ர்க்கு இல்லை. ராணுவ நாதாரிகள் அம்பிகாவுக்கு பின்புறம் காண்பித்ததை ஒன்றுமே சொல்லவில்லையே
இதிலிருந்து புரிய வில்லையா? 1980க்கு பிறகு இங்கு நடந்த நடக்கின்ற அநியாயங்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது– சட்டம் தூங்கி கொண்டிருக்கின்றது. ஆனால் அம்னோ அல்லாதவர்களை துன்பபடுத்துவதில் மிக அக்கறை இந்த காவலுக்கு– நீதிபதிகளும் தூங்கி கொண்டிருக்கின்றனர்.
அரசியல்வாதிகள் தப்பு செய்தால் கூட பாதகமில்லை. மக்கள் தப்பு செய்தாலும் பாதகமில்லை. ஆனால், நீதித் துறை தூங்கிடக் கூடாது!
நடிகர் இரஜினி சமீபத்தில் சொல்லக் கேட்டது.
சட்டம் நீதி கொர்ர் கொர்ர் தூங்குகின்றது.தட்டி எழுப்பாதிர்கள்.நன்றாக தூங்கட்டும்.