“மக்கள் தரம் குறைந்த ஒரே மலேசியா மினி மார்கெட்டுக்களில் பொருட்களை வாங்கப் போராடும் போது ஆடம்பர அணிகலன்கள் மீது பணத்தைச் செலவு செய்வது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை.”
புதல்வி பொருட்களை வாங்க 20,000 ரிங்கிட் செலவிட்டது தொடர்பில் பிரதமர் மீது சாடல்
ஒரு மூளை அணு: நீங்களும் உங்கள் குடும்பமும் அவ்வப்போது பொருட்களை வாங்க முடியாவிட்டால் குடியரசு அல்லாத ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக நீங்கள் இருந்து என்ன பயன்?
முகாபே குடும்பத்தினர் பேரங்காடி ஒன்றுக்குள் நுழைந்தால் அங்குள்ள வணிகர்களும் மிக்க மகிழ்ச்சி அடைவார்களாம். மார்கோஸ், சுஹார்த்தோ, பென் அலி குடும்பங்களுக்கும் அது பொருந்தும்.
சர்வாதிகாரிகளும் ஊழல் ஆட்சியாளர்களும் பொருளாதாரத்துக்கு பேருதவி செய்கின்றனர். அதாவது மொத்த தேசியக் கடனை அதிகரிக்க வகை செய்கின்றனர். உங்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்கள் பணக்காரர் என்னும் உணர்வைப் பெறுவீர்கள்.
பல இனம்: பிஎன் -னுக்குத் தலைக்கனம் முற்றி விட்டது. உணர்வுகளை அது புரிந்து கொள்ளவில்லை. பெர்த்-தில் பொருட்கள் வாங்கப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில் பல தவறுகள் உள்ளன.
தந்தை என்ற முறையில் நெருக்கடியான இந்த கால கட்டத்தில் இப்படி ஆடம்பரமாகச் செலவு செய்ய நமது பிள்ளைகளை எத்தனை பேர் அனுமதிப்போம்?
இரண்டாவதாக நாட்டின் பிரதமர் என்னும் முறையில் வெளிநாட்டில் அதிகாரத்துவ நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது தாங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறோம் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
மூன்றாவதாக பிரதமருடைய வருமானம் எவ்வளவு என்பது எல்லா மலேசியர்களுக்கும் தெரியும். நஜிப்பின் முழு வாழ்வு ஆதாரமும் அரசியலைச் சார்ந்துள்ளது. அதனால் அவருடைய வருமானத்தை ஒருவர் எளிதாக கணக்கிட முடியும். அத்தகைய ஆடம்பரச் செலவுகள் அவரது சக்திக்கு உட்பட்டதா இல்லையா என்பது நமக்குத் தெரியும். தயவு செய்து எங்கள் விவேகத்தை அவமானப்படுத்த வேண்டாம்.
மலேசியாவில் நமக்கு தேர்வுக்கு அதிக வழிகள் இல்லை. உறுதியற்ற போக்கைக் கொண்டுள்ள பிரதமரை நாம் பெற்றுள்ளோம். அவருடைய நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகி உள்ளது. தன்னலத்தைக் குறியாகக் கொண்ட இனவாதத் துணைப் பிரதமரையும் நாம் பெற்றுள்ளோம்.
மலேசியாவாட்ச்4: அது மக்கள் வரிப்பணம் இல்லை என்றால் பிரதமரது புதல்வி எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.
ஆனால் அவர் எப்படி அங்கு போனார். மக்கள் வரிப்பணத்தில் அதிக வாடகையுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டாரா ? பிரதமருக்குக் கிடைக்கும் சகாயங்கள் அவருடைய குடும்பத்துக்கும் கிடைக்குமா ?
பையுவன்செங்: அந்தப் பணம் அவர்களுடைய சொந்தப் பணமாக இருந்தால் அவ்வளவு பணத்தை அவர்கள் செலவு செய்தது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். வலைப்பதிவாளர்கள் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுகின்றனர்.
நம்பிக்கை: அரசியல்வாதிகளுடைய பிள்ளைகள் அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என அண்மையில் நினைவூட்டப்பட்டது. இந்த விஷயத்தைத் தொடர்ந்து எல்லோரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது பொருளா ? இனிமேல் அம்னோ வலைப்பதிவாளர்கள் முழு உலோகக் கவசத்தை அணிந்து மோதத் தொடங்குவர்.
பெண்டர்: தவறு என்றால் தவறு தான். மக்களுடைய நடப்பு நிலையைக் கருத்தில் கொள்ளும் போது முதல் குடும்பம் ஆடம்பரமாக செலவு செய்வது பொருத்தமற்றதாகும்.
லிம் குவான் எங்-கின் புதல்வருக்கு செய்யப்பட்டதை இதனுடன் ஒப்பிட வேண்டாம். இது அவதூறும் அல்ல. அரசியலும் அல்ல.
அது பொது அறிவு- நெக்லெஸ்களையும் மற்ற அணிகலன்களையும் வாங்குவதற்கு தலைவர் ஒருவர் பெரும்பணத்தைச் செலவு செய்கிறார். அதே வேளையில் மக்கள் உணவுப் பொருட்களை வாங்கப் போராட வேண்டியுள்ளது. தரம் குறைந்த ஒரே மலேசியா மின் மார்கெட்டுக்களில் பொருட்களை வாங்கத் தங்களிடம் உள்ள கொஞ்சப் பணத்தையும் செலவிட வேண்டியுள்ளது.
இது, மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஏழ்மையான தலைமைத்துவத்தை சித்தரிக்கிறது.
சொங் யோக் லெங்: மலேசியா ஒரு போதும் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது இல்லை என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி என்றால் நஜிப் பெர்த்தில் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில் ஏன் கலந்து கொள்கிறார்? வரலாற்று ஆசிரியர்கள் தயவு செய்து அதனை விளக்க வேண்டும்.
ஒரே எம்: பிரதமர்: “என் புதல்வி அதனைச் செய்யவில்லை.” துணைப் பிரதமர். மறுப்பு மட்டும் போதாது போலீசில் புகார் செய்யுங்கள்.