முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், இத்தனை நடந்த பின்னரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் மசீசவின் நிலை கண்டு ஏமாற்றமடைவதாகக் கூறினார்.
நாட்டு நடப்பின்மீது மசீச அடிநிலை உறுப்பினர்களும் சீனர் சமூகமும் அதிருப்தி கொண்டிருப்பதாக அவ்ர் சொன்னார்.
“என்னுடைய கருத்தைக் கேட்டால் நான் இப்போதுள்ள தலைவர்கள்போல் நடந்து கொண்டிருக்க மாட்டேன். வேறு மாதிரியாகத்தான் நடந்து கொண்டிருப்பேன்.
“அவசியமென்றால் கட்சியில் அல்லது சமூகத்தில் நாம் இன்னமும் *(பிஎன்) கூட்டணியில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று கருத்துக் கணிப்புக்கூட நடத்தலாம்”, என புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் ஒங் கூறினார்.
ம.இ.க. தலைவர் பழனிவேல் வாய் திறக்காமல் மௌனசாமியாகி விட்டார். யாராவது அவரது வாய்க்குப் பூட்டு போட்டுடாங்களா? சுவாமியே! சரணம் ஐயப்பா!. ஒருகால் மாலை போட்டு விட்டாரோ என்னவோ தெரியவில்லை. மன்னிக்கணும் தலைவரே.
தலைவர் பழநிவேலா இல்லை சுப்ரமணியமா ?
நீதிமன்ற முடிவு வராத வரைக்கும் கட்சி தலைவர் பழனிவேலுதானப்பா. தன்னத்தானே தானே தலைவருன்னு சொல்லிகிட்டு இருந்தா நீதிமன்றத்தில் போட்ட வழக்கை நடத்த வாதிக்கு தகுதி இல்லை என்று மனு போட்டு அந்த மேல் முறையீட்டையே தள்ளுபடி செய்யச் சொல்லலாமே. ஏன் அதைச் செய்யத் துணிவில்லை இந்த கம்மனாட்டிகளுக்கு?
ம இ க ஒரு சூடு சொரணை இல்லாத கட்சி .அதில் இறுக்கும் 2 தலைவனும் சூடு சொரணை இல்லாத மற மண்டை என்று எல்லாருக்கும் தெரியும் .இத்தனை பிரச்சனைக்கும் சாதனை தலைவர் தான் காரணம் என்றும் எல்லாருக்கும் தெரியும்.நான் தான் தலைவன் என்று பிறகனபடுத்தி இறுக்கும் சுப்ரா இருகானே இவன் ஒரு குஜா துக்கி
கவலை படாதே சகோதரர்களே, இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் அறை வாங்கினாலும் அன்கேயதான் தலையில் முக்காடு போர்த்தி துதி பாடி சமுதாயத்தை அடமானம் வைப்பான்.எந்த காலத்திலும் பாரிசானை விட்டு வெளியேற மாட்டார்கள்.
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட் ஒரு மூட்டை பூச்சிக்காக ஒரு வீட்டையே கொளுத்துகிறான்…..
ம.இ.க.-வைப் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம். அடுத்த தேர்தலுக்குப் பின் இப்படி ஒரு கட்சி இருப்பதே மலேசிர்களுக்குத் தெரியாமல் போய் விடும். அப்பத்தான் தமிழர் ஒன்று படும் நேரம் வரும்.
சீனன் நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுவான். நம்மால் முடியாது! உண்மையைச் சொன்னால் சாமிவேலு தான் வாய் திறக்க வேண்டும். அவர் தான் பதவிக்காக இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறாரே! அப்புறம் எங்கே…..இவர்கள் பேசி…! ஊகும் …ஆகாது! ம.சீ.சா. பழையவர்களைக் கைகாட்டிவிட்டு இப்போது உள்ளவர்கள் ஒதுங்கிக் கொண்டார்களே! அது தான் அவர்கள் திறமை!
கூட்டனியில் இருக்கும்போதே இவ்ளோ பிரச்னை,ம.இ .க ,எம் .சி .எ ,போன்ற வுருப்பு கட்சிகள் விலகினால்,வேறாக மாறலாம்.வும்னோ காரன் துணிந்து தாக்குவான் ஆனால் எதிர் கட்சி காரன் வீடியோ எடுப்பான் முகநூல் யூ தியுப்பில் பதிவெற்றி வாணிபம் செய்வான்,நாராயண நாராயண ……
இது அம்னோ-விற்கும் மசீச-விற்கும் இடையே நடக்கும் இருதரப்பு “சகோதரத்துவ இன பிரச்னை”-யிலே, மஇகாவை கோத்துவிட்டு முத்தரப்பு “சகோதரத்துவ இன பிரச்னை”யாக்க நினைக்கிறீர்களே இது நியாயமா ?
அம்னோக்காரன் அறைந்தாலும், மஇகா பெருந்தனமையுடன் “இது சகோதரத்துவ அறை”-ன்னு சொல்லிட்டு, “கணவனே கண் கண்ட தெய்வம்”-ன்னு, மஇகா அம்னோகூட இணைந்து இரண்டற கலந்து இல்லறம் நடத்தி கொண்டிருக்கும்போது குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் குள்ள நரிகள் ஏமாந்து போவார்கள் என்று மஇகாவின் “ப்ளடி இந்தியன்” தலைவர்களின் காட்டமான அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கலாம்.