ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால், முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினோ அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலியோ வெளிப்படையாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்க்க வேண்டும் என ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
இதை விட்டால் வேறு வழியில்லை என்று ஐடியாஸ் நிர்வாக வான் சைபுல் வான் ஜான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“முகைதின் அல்லது தெங்கு ரசாலி முன்வந்து நஜிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
“யாரும் அதைச் செய்யாவிட்டால் எதுவும் நடக்கப் போவதில்லை”, என்றாரவர்.
நேற்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், முகைதின், ரசாலி, முகம்மட் ஷாபி அப்டால், ஒங் தி கியாட் ஆகியோர் ஒன்று சேர்ந்து செய்தியாளர் கூட்டம் நடத்தியது நஜிப்புக்கு எதிரான போராட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருமா என்று வினவியதற்கு வான் சைபுல் இவ்வாறு கருத்துரைத்தார்.
முன்னெடுப்புகளை செய்ய விரும்புவோர் ஆட்சியை கவில்த்தப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை முன்னமே சொன்னாதான் மக்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்றால் என்ன பயன்?
கொளையன் சங்கிலி முத்து சகாமி வேலு என்கே காநோம்
அதென்ன சாமிவேலை மட்டும் கொள்ளையன் என்று பிரித்து விடுகிறீர்கள். மேலே படத்தில் காணப்படும் தலைவர்களும், தற்போது இவர்கள் எதிர்க்கும் தலைமைத்துவமும் “கூட்டு களவாணிகள்”-தான்.
இந்த கூட்டு களவாணிகளுக்கு அப்பனுக்கு அப்பன்