நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் பிஎன்னால் ஏற்பட்டுள்ள விலை உயர்வுகளை எதிர்கொள்வதற்கு உதவியாக சிலாங்கூர் அரசு ஞாயிற்றுக்கிழமையை டோல்-அற்ற நாளாக ஆக்கிட வேண்டும் என மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
சிலாங்கூர் அரசு ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையிலும் டமன்சாரா- பூச்சோங் நெடுஞ்சாலையிலும்(எல்டிபி) இதைச் செய்ய முடியும் என கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்ஸே ஹான் கூறினார்.
அவ்விரு நெடுஞ்சாலைகளிலும் சிலாங்கூர் 20 விழுக்காடு பங்குதாரர். கடந்த ஆண்டு அவை ரிம138 மில்லியன் ஆதாயம் கண்டன. அதில் சிலாங்கூரின் பங்கு ரிம27.6 மில்லியன்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 13 மில்லியன் மோட்டாரோட்டிகள் அவ்விரு நெடுஞ்சாலைகளையும் பயன்படுத்துவதாக மதிப்பிடப்படுகிறது.
எனவே, ஞாயிற்றுக்கிழமை டோல்-அற்ற நாளாக அறிவிக்கப்பட்டால் ஆண்டுக்கு 13மில்லியன் மோட்டாரோட்டிகள் பயனடைவார்கள் என்றாரவர்.
ஆனால் 80 விழுக்காடு பங்குதாரர் நஷ்ட ஈடு கேட்பாரே? அவர்கள் மலை விழுங்கிகள் ஆயிற்றே!
பினாங் தமிழ் செகொலாஹ் மேநேங்காஹ் என்னவாச்சி,நாராயண நாராயண.