அருள் கந்தாவுடன் விவாதிக்க புவாவுக்குப் பதில் ரபிஸி

debate1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தாவுடனான  விவாதத்தில் பொதுக்  கணக்குக்குழு  உறுப்பினர் டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி  பங்கேற்பார்.

அவரை பக்காத்தான் ஹராப்பான்  தேர்வு  செய்துள்ளதாக  டிஏபி  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லோக்  தெரிவித்தார்.

“அருள்  கந்தாவுடன்  புவா  விவாதமிடக்  கூடாது  என்ற  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாவின்  முடிவை  மதிக்கிறோம். புவாவின்  இடத்தில்  ரபிஸி  செல்வார்”, என்றாரவர்.

இதனிடையே ரபிஸி, விவாதத்தில்  புவா  தம்  பயிற்றுநராக  இருப்பார்  என்று  கூறினார்.  மேலும்,  அருள்  கந்தா  தம்முடன்   விவாதமிடுவதைத்  தவிர்க்க  இயலாது  என்றும்  அவர்  சொன்னார்.

மறுப்பது  1எம்டிபியிடம்  பல  இரகசியங்கள்  மறைந்து  கிடக்கின்றன  என்பதையும்  பிஏசி-இலிருந்து  புவாவை  வெளியேற்ற  சதி  நடக்கிறது  என்பதையும்  ஒப்புக்கொள்வதாக  இருக்கும்.

“அவரால் அமைச்சர்களை  விடவும்  தெளிவாக  விளக்கமளிக்க  முடியும்”, என ரபிஸி  குறிப்பிட்டார்

தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  ஆர்டிஎம்  விவாதத்தை  நேரடி  ஒளிபரப்புச்  செய்யாது  என்ற  முடிவை  மாற்றிக்கொள்ள  வேண்டும்  என்றும்  லோக்  கேட்டுக்கொண்டார்.

“ஆர்டிஎம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால்,  விவாதத்தை  ஏற்று  நடத்த  முன்வரும்  வேறு தொலைக்காட்சி  நிலையத்துக்குச் செல்வோம்” என்றும்  லோக் கூறினார்.