பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரிம 2.6பில்லியன் தொடர்பான கேள்விகளுக்கு நஜிப் அல்லது அவரால் நியமிக்கப்படும் அமைச்சர் டிசம்பர் 3-ஆம் தேதி பதிலளிப்பார்.
நடப்பு மக்களவை அமர்வின் இறுதி நாளில் கேள்வி-நேரத்தின்போது அவற்றுக்கு விளக்கமளிக்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டால் அன்றே அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பதில்லை என அஸலினா கூறினார்.
“பிரதமர் இன்று பதிலளித்தால் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும். அதனால் எல்லாக் கேள்விகளையும் ஒன்றுதிரட்டி பதிலளிப்பது நல்லதல்லவா?”, என்றவர் வினவினார்.
பிரதமரே பதிலளிப்பாரா என்று கேட்டதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
“இதற்கு எப்படி நான் பதில் சொல்ல முடியும்? நான் பிரதமர் அல்லவே”, என்றார்.
இந்த இறுதி நாளே, இறுதியாக இருக்கட்டும்!
நீ பிரதமர் இல்லை… பிறகு ஏன் இந்த விசயத்தில் மூக்கை நுழைக்கிறாய்.. கொள்ளையடிக்க கொல்லை புறமாய் வந்த நீ பேசாமல் மூடிக்கொண்டு இருப்பது நல்லது…
கெட்டிக்கார தனமான பேச்சு . கடைசி நாளில் பதில் சொன்னால் அது பற்றி அடுத்து பேச நேரம் இருக்காது . ஆகவே ஆளும் கட்சி பொய் மூட்டைகளை அள்ளி வீசினாலும் அதுதான் உண்மை என பத்திரிக்கைகளில் செய்தி வரும் அதை உண்மை என நாமும் நம்பி விடுவோம் என்ற எண்ணம் அவர்களுக்கு .
அல்த்யாந்துயா கொலை வழக்கில் முந்திரி கொட்டைபோல் முந்தி கொண்டு இஸ்லாமிய புனித நூலின் சத்தியம் செய்த நஜிப், இந்த 2.6 பில்லியன் பணம் ஊழல் பணமல்ல அது “நன்கொடை” என இன்றுவரை இஸ்லாமிய புனித நூலின் சத்தியம் செய்யாமல் இருப்பது இது “நன்கொடை” அல்ல ஊழல் பணம்தான் என்று எதிர்கட்சிகள்/மக்கள் கூறுவதில் தப்பிலையே !
அப்படி அது நன் கொடையாகவே இருந்தாலும் ஏன் அந்த நன்கொடை வழங்கப்பட்டது? ஒரு மில்லியன் ஓர் இரண்டு மில்லியன் அல்லவே– 2500 மில்லியன் அமெரிக்க வெள்ளி- சும்மாவா கொடுப்பான்கள்? எந்த மடையனுக்கும் இது நம்பமுடியாத பொய் என்று தெரியுமே? இந்த நாடு எங்கு போய் கொண்டு இருக்கிறது? அவன் தற்காப்பு அமைச்சராக இருந்த பொழுது அடித்த கொள்ளை எவ்வளவோ? இங்கு யார் கேட்க முடியும்? இந்த இழி ஜென்மங்களுக்கு வெட்கம் மானம் ஈனம் ஒன்றுமே கிடையாது– இது மேற்கு நாடுகளில் நடந்தால் என்ன ஆகி இருக்கும்?