முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அம்னோ தலைவர்களைக் குறை சொன்னார் என்ற புகார்களின் தொடர்பில் இன்று போலீசாரால் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.
மகாதிருக்கு எதிராக பல புகார்கள் வந்ததை அடுத்து அதிகாரிகள் அவர்மீது புலன் விசாரணை செய்ய முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி கடந்த மாதம் தெரிவித்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து இறக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் மகாதிர், 90, ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவி விலகக் கோரிக்கை விடுத்து நடத்தப்பட்ட பெர்சே பேரணியில் இரண்டு தடவை சென்று கலந்து கொண்டார்.
அம்னோ தொகுதித் தலைவர்கள் பலர் கையூட்டு பெற்றிருக்கிறார்கள் எனக் கூறிக்கொண்டிருப்பதற்காக மகாதிருக்கு எதிராக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்புகார்களின் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய மகாதிர் வெள்ளிக்கிழமை போலீசை வரச் சொல்லியிருக்கிறார் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் செவ்வாய்க்கிழமை கூறினார்.
இது ஆரம்பத்திலே செய்து இருக்க வேண்டிய வேலை! முதலில் இவன் குடும்ப சொத்து அனைத்தும் முடக்குங்கள்….திமிரு தானாக அடங்கும்!!!
திமிரும் கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் பதவியை குரங்கு பிடி பிடிப்பது எல்லாம் அம்னோ ஜென்மங்களுக்கு கை வந்த கலை.