பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அம்னோவுடன் சேர்ந்து சிலாங்கூரில் ஒற்றுமை அரசு அமைக்க முயன்றார் என பாஸின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறினார்.
அது எப்போது என்பதை அந்த சாலோர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவிக்கவில்லை என்றாலும் சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அது நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
“பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் அல்லது மூவரை பாஸில் சேர்த்துக்கொண்டு அம்னோவுடன் இணைந்து சிலாங்கூரில் மாநில அரசை அமைக்க முயன்றதைத் தலைவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
“அது பற்றி வினவப்பட்டபோது அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இப்போது நான் இதை வெளியில் சொன்னதற்காக அவர் என்மீது கோபமுற்றாலும் கவலையில்லை”, என ஹுசாம் கூறினார்.
இந்த நம்பிக்கைத் துரோகி கட்சியை நம்பி அஸ்மின் மோசம் போகப் போகின்றாரா?
“அது பற்றி வினவப்பட்டபோது அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்”
உண்மை தெரிந்த பிறகு உமக்கு எதற்கு மதப் போர்வை? நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களுக்கு ஹுடுத் சட்டத்தில் என்ன தண்டனையோ? இவர்களெல்லாம் சுயநல அரசியல்வாதிகள் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.
இதை நாங்கள் எப்படி நம்புவது . நீ பதவி கிடைக்க வில்லை என்பதற்காக வெளியேறியவன் உன்னை நம்ப மலேசியர்கள் தயாராக இல்லை