1எம்டிபி தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான அருள் கந்தா கந்தசாமி 1எம்டிபியைச் சூழ்ந்துள்ள விவகாரங்கள் பற்றி அம்னோவுக்கு விளக்கமளிப்பார்.
‘பிரதான விளக்கமளிப்புக் கூட்டம்’ என்று வருணிக்கப்பட்டுள்ள அந்நிகழ்வை அம்னோ தகவல் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. அது நவம்பர் 14-இல் புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறவுள்ளது.
அதில் நாடு முழுவதிலுமிருந்து 191 தொகுதித் தலைவர்களும் ஆயிரம் என்ஜிஓ பேராளர்களும் கலந்து கொள்வார்கள் என பெர்னாமா கூறியது.
அக்கூட்டத்தில் 1எம்டிபி தவிர்த்து பட்ஜெட் 2016, பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம்(டிபிபிஏ) ஆகியவை பற்றியும் விளககமளிக்கப்படும் என அம்னோ தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.
கூட்டம் காலை மணி 8.15க்கு தொடங்கும் என்று கூறிய மஸ்லான் எதிரணியினரும் வரலாம் என்றார்.
பொது விவாதம் என்றால் மக்களவை தலைவர் ஆசி கிடைக்க குதிரை கொம்பாய் இருக்கு, ஆனால் அம்னோவிற்கு விளக்கமளிப்பு என்றால் இரவு சந்தையிலே விக்கிற “சரக்கு”போல சடாரென்று கிடைத்து விடுகிறது. ஒருவேளை, பொது விவாதம் என்றால் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டுமே என்ற தயக்கமும், அம்னோவிற்கு விளக்கமளிப்பு என்றால் எருமைகளிடம்தானே கதை சொல்ல போகிறார் என்று மக்களவை தலைவர் நினைத்திருப்பாரோ ?
பொருளாதரா வல்லுனர்கள் பல்வேறு வழிகளில் பணத்தை பன்மடங்காக்கும் திறமை அறிந்தவர்கள் அது சாதாரண மக்களுக்கு புரியாது! நாள் ஒன்றுக்கு நாணய பரிமாற்றம் 5.2-5.3T,கச்சா எண்ணையில் 15-30B, தங்கம் 15-30B வரையில் நடகின்றது.இந்த சந்தைகளில் உலக பிரதான வங்கிகள் (Top 10 Banks) கணிசமான முதலீடு செய்து பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.இதை தவிர Sovereign wealth fund முதலீகளிலும் இங்கு பேசபடும் 2.6B ஓரிரு நாற்களில் ஈட்டுவது சாதாரண விஷயம்.இதில் முழுமையாக பங்கேற்ற இந்தோனேசியா பங்கு சந்தை CI (composite index இன்று 8 மடங்கு KLCI யை முந்திவிட்டது.
அதைவிட எதிர்அணியினருக்குத் தனியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமே! அம்னோ கூட்டத்தில் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். எதிர் அணி அப்படி அல்லவே!
அம்னோவுக்கு விளக்கமளிப்பா? அது பயிரை மேய்த வேலிக்கு விளக்கமளிப்பாதற்கு சமம்.. இது கூட தெரியாத மடையர்கள் என்று மலேசிய மக்களை நினைத்துக் கொள்ளாதிர்கள்…