மகாதிர்: கேள்வி கேட்டார்கள்; பதிலளிக்க மறுத்தேன்

enqமுன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்  போலீசாரின்  45-நிமிட  விசாரணை  பற்றிக்  கவலைப்பட்டவராக  தெரியவில்லை.

விசாரணைக்குப்  பின்னர்  செய்தியாளர்களைச்  சந்தித்த  மகாதிர்  சிரித்துக்கொண்டே  அவர்களின்  கேள்விகளுக்குப்  பதிலளித்தார்.

“அவர்கள் (போலீஸ்)  கேள்வி  கேட்டார்கள். பதில்  அளிக்க  முடியாது  என்று  சொல்லி  விட்டேன்”,  என்றாரவர்.

போலீஸ்  அவர்மீது  நடவடிக்கை  எடுக்க  வாய்ப்புண்டா  என்று  வினவிதற்கு, “அது  அவர்களைப்  பொறுத்தது. எனக்குத்  தெரியாது”, என்றார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  பதவியிலிருந்து  வெளியேற்றும்  முயற்சியில்  அம்னோவைவிட்டு  மீண்டும்  வெளியேறுவாரா  என்றும் அவரிடம்  கேட்கப்பட்டது.

“மாட்டேன். அது  என்னுடைய  கட்சி”, என்று  புன்னகையுடன்  மறுமொழி  அளித்தார்.

போலீசார்,  கோலாலும்பூரில்,  யயாசான்  அல்-புஹாரி  கட்டடத்தில்  முன்னாள்  பிரதமரை  விசாரணை  செய்தனர்.