ரொம்பின் எம்பி ஹசான் அரிபின் இனி செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்போவதில்லை என்று அறிவித்திருப்பது பொதுக் கணக்குக்குழு தலைவர் பதவிக்கு அவர் தகுதியானவர்தானா என்ற பலத்த சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளதாக டிஏபி கூறுகிறது.
ஹசான் செய்தியாளர் கூட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கும் அளவுக்கு செய்தியாளர்களைக் கண்டு அஞ்சுவதைப் பார்க்கையில் அரசாங்கக் கணக்குவழக்குகளைக் கண்காணிப்பதில் பொறுப்புடனும் நேர்மையுடனும் அவரால் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுவதாக கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் கூறினார்.
“உலக முழுவதிலும் பொதுக் கணக்குக்குழுக்கள், அனைவரும் பார்க்க அவற்றின் கூட்டங்களை நடத்துகின்றன. ஆனால், மலேசியாவிலோ பிஏசி கமுக்கமாக செயல்படுகிறது பிஏசி தலைவரோ செய்தியாளர்களை மீதுள்ள வெறுப்பால் செய்தியாளர் கூட்டங்களையே தடை செய்திருக்கிறார்”, என லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
corrupted டைகோ ஹசன் இவனுக்கு பதவி ஒரு கேடா?
தற்போது இந் நாட்டில் உயர் பதவியில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் இன்பத்துடன் அனுபவித்துக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகள் எல்லாம் திறமைசாலிகளா–அதுதான் அரைவேக்காடு என்று சொல்லிவிட்டேனே– ஜால்ராக்களுக்கும் கூஜா தூக்கி களுக்கும் தான் எல்லாமே. கேட்க நாதி இல்லை -கேட்டாலும் அம்னோ வேட்டை நாய்கள்(உண்மையான நாய்களே தயவு செய்து மன்னிக்கவும்) வெறி கொண்டு வேட்டை யாட வரும்.