நூருலுக்கு எதிராக நாடாளுமன்ற நடவடிக்கையா? அஸலினாவுக்குக் கண்டனம்

nurulலெம்பா பந்தாய்  எம்பி  நூருல்  இஸ்ஸா  நாடாளுமன்ற  உரிமைகள், சலுகைகள்  குழுவுக்குக்  கொண்டு  செல்லப்படலாம்  என்று  கூறிய  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒத்மான் பரிகாசத்துக்கு  ஆளானார்.

நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  எம்பிகளின்  செயல்களைக்  கட்டுப்படுத்தும்  அதிகாரம் அக்குழுவுக்குக்  கிடையாது  என்பதை  பிகேஆர்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  லத்தீபா  கோயா அ அமைச்சருக்கு  நினைவூட்டினார்.

“எந்தவொரு  புகாரும் ஒரு  எம்பி-இன்  நாடாளுமன்ற நடத்தைப்  பற்றியதாக  இருத்தல்  வேண்டும்.

“இது  அடிப்படையான விசயம். நாடாளுமன்றத்துக்குப்  பொறுப்பாகவுள்ள அமைச்சர் இதை  அறியாதிருப்பது  ஆச்சரியம்”, என  லத்தீபா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

தம்மை  சூலு  சுல்தான்  எனப்  பிரகனடப்படுத்திக்  கொண்டிருந்த  காலஞ்சென்ற  ஜமாலுல்  கிராம் III-இன்  புதல்வி  ஜெசல்  கிராமை  நூருல்  இஸ்ஸா மணிலாவில்  சந்தித்தது  குறித்து  அரசாங்கம்  உரிமைகள்  மற்றும்  சலுகைகள்  குழுவிடம்  புகார்  செய்யக்கூடும்  என  அஸலினா  நேற்று  கூறியிருந்தார்.