அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்றிரவு உரையாற்றும்போது “எல்லை மீறிச் செல்லக்கூடாது” என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார்.
நாளை அம்னோ ஆண்டுக் கூட்டம் தொடங்கவுள்ள வேளையில் முகைதின் இன்றிரவு கம்போங் பாருவில் உரையாற்ற விருக்கிறார். அவரது உரையைக் கேட்பதற்கு பலரும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.
“உரையாற்றுவது அவரது விருப்பம். ஆனால், எல்லை கடந்து சென்று விடக்கூடாது. எல்லை மீறினால் நடவடிக்கை எடுப்போம்”, என தெங்கு அட்னான் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தெங்கு அட்னான் அப்படிக் கூறுவதக் காண்பிக்கும் காணொளியை மினாக் ஜிங்கோ என்ற வலைப்பதிவர் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
எல்லை மீறி செல்வது யார்?? துணைப் பிரதமரா அல்லது கொள்ளையர்களின் முன்னோடியாக விளங்கும் தலைவரா??? தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தனக்கு பாதுகாப்பு கவசமாக தேவையற்ற புதுப்புது சட்டங்களையும், அமுலாக்க இலக்காக்களையும் அதன் அதிகாரிகளையும் அடிக்கிக் கொண்டிருக்கிறார்!!!