மனோகரன் எம்பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து மக்களவையில் கேள்வி

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Y.B. எம். மனோகரன் தமிழ்ப்பள்ளி குறித்து மக்களவையில் நேற்று (02.11.2011) கேள்வியெழுப்பினார். மனோகரன்  கல்வி அமைச்சரிடம் எழுப்பிய வாய்மொழியான கேள்விகளும் அக்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அளித்த பதில்களும் பின்வருமாறு:

கேள்வி :

1. 1960 தொடக்கம் 2011-ம் ஆண்டு வரை நாட்டின் தமிழ்ப்பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் மாணவர் அதிகரிப்பின் சதவீதமும் அதன் காலவரையறையும் என்ன?

2. 1960-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை எத்தனை பள்ளிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன / மறுசீரமைக்கப்பட்டுள்ளன?

பதில் :

மேன்மைதங்கிய மக்களவையின் கவனத்திற்கு. மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் Y.B. மனோகரன் அவர்களின் வாய்மொழியான கேள்விக்கு 1960-ம் ஆண்டு முதல் இன்று வரை மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளி விவரங்களை ஒப்பிட்டுக் கூறுவது கடினமான ஒன்றாகும். இருப்பினும் ஏறத்தாழ ஜுன் 2011 வரை நாட்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 102,412 ஆகும். 2010-ல் 106,221 மாணவர்களும் 2009-ல் 108,867 மாணவர்களும் ஆகும்.

2. 1960 இருந்து இன்றுவரை 523 தமிழப்பள்ளிகள் நாடுமுழுவதும் இருந்து வருகின்றன. இவற்றில் 3 பள்ளிகள் வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்வதால் புதியப் பள்ளிகள் உருவாக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி கோலா திரலா, கேமரன் மலையில் 2002-ல் கட்டப்பட்டது. இங்குள்ள இந்திய சமூகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இதுவரை அரசாங்கம் 17 புதிய கட்டடங்கள் நாடு முழுவதும் கட்டியுள்ளது.

கெடாவில் அமைந்துள்ள தேசிய மாதிரி ஆரம்பத் தமிழப்பள்ளி பாய பெசாரில் புதிய கட்டடத்தைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

TAGS: