மலேசியர்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள பல வேலைகள் செய்வது சாத்தியமான ஒன்றுதான் என்கிறார் அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.
அவரே மூன்று வேலைகளைச் செய்கிறாராம்.
“எனக்கு, எம்பி, துணை அமைச்சர், அம்னோ தகவல் தலைவர் என மூன்று வேலைகள். மலேசியாவில் பலர் இரண்டு வேலைகள் செய்கிறார்கள்.
“கடுமையாக உழைத்து நேர்மையாக வாழ்கிறார்கள்”, என அஹ்மட் டிவிட் செய்திருந்தார்.
அஹ்மட் வார இறுதியில் மலேசியர்கள் வரவுசெலவைச் சரிக்கட்ட இன்னொரு வேலையும் செய்யலாம் என்று சொல்லி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இன்று அவர் தம் கருத்தைத் தற்காத்துப் பேசினார்.
“லிம் குவான் எங் ஒரு சட்டமன்ற உறுப்பினர், எம்பி, (பினாங்கு) முதலமைச்சர். வான் அசீசா ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு எம்பி, எதிரணித் தலைவர்.
“ஆக மூன்று வேலைகள். வேலை செய்பவர்கள் இணையவழி வணிகத்தில் ஈடுபடலாம் என்றுதான் சொன்னேன். அதற்கேன் ஆத்திரப்பட வேண்டும்?”, என்று அந்த பொந்தியான் எம்பி வினவினார்.
ஒரு வேலை 8 மணி 3 வேலை 24 மணி நேரம் இந்த கம்னாட்டி போதையில் உளறுகிறான் .
……………மலேசியன் GENGSTERS please do it
3 வேலை செய்வதை மட்டும்தான் சொன்னீர், முப்பது வகையில் கிம்பளம் வாங்குவதை வெளியே சொன்னால் என்ன?
நீர் சரியான காமெடியன் . வடிவேலு கவிழ்ந்தார்.நானும் கலையில் எழுவேன் , பல் துலக்குவேன் . குளிப்பேன் . துடைப்பேன். சாமி கும்பிடுவேன். தலை வாருவேன் . ஆடை அணிவேன். சென் அடிப்பேன் . கார் சாவியை எடுப்பேன் . கதவை திறப்பேன் . ஸ்டார்ட் செய்வேன் . சாலை விளக்குகலில் பத்து முறை நிறுத்தி ஓட்டுவேன் . இப்படி 21 வேலைகள் அலுவலகம் செல்லும் முன்னர் செய்வேன் . ஆனால் உனக்கு காரை திறந்தாலும் சம்பளம் எங்களுக்கு .
மக்கள் என்ன சொன்னாலும் இந்த அரவேக்காடு மந்திரிகளுக்கு செவிடன் காதில் ஊதிய சங்குதான்.இவன்கள் நல்லா வாழனும் மக்கள் திண்டாடனும். அதுதான் நாட்டின் நிலவரம்.