சாலே: பாதகமான கருத்துகள் குறித்து முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்

viewமற்றவர்கள்  பற்றிய  தப்பான  கருத்துகளை  முஸ்லிம்கள்  அப்படியே  நம்பி  விடக்  கூடாது.

இணையத்தின்  வழியாகவும்  செய்தித்தாள்கள்,  சஞ்சிகைகள்  வழியாகவும்  தெரிவிக்கப்படும்  கருத்துகள்  எல்லாமே  உண்மையானவை  அல்ல  என்று  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  கூறினார்.

“அவதூறுகளும்  பொய்களும்  பொறாமையும்,  பதவி  ஆசையும்  நிரம்பிய  காலத்தில்  வாழ்கிறோம்.

“தீய  கருத்துகள்  மக்களின்  மதிப்பைக்  கெடுக்கின்றன. அவை  இஸ்லாமிய  போதனைகளுக்கும்  இஸ்லாத்தைப்  பின்பற்றுவோருக்கும்  ஏற்புடையவை  அல்ல”, என்று  கோட்டா  பெலூட்டில்  அமைச்சர்  கூறினார்.

முஸ்லிம்கள்  கெட்ட  வதந்திகளைப்  பின்தொடர்ந்து  செல்லக்கூடாது,  மனத்தை  விஷமாக்கும்  கருத்துகளை  நம்பக்  கூடாது  என்று  உசுகான்  சட்டமன்ற  உறுப்பினருமான  சாலே  கூறினார்.

-பெர்னாமா