பாஸ், அம்னோ இரண்டுக்கும் ஒன்றின் உதவி மற்றொன்றுக்குத் தேவை அதனால்தான் அவை தோழமை உடன்பாடு செய்துகொள்ள விரும்புகின்றன என்று அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி தெங்கு ஹம்சா கருதுகிறார்.
அடுத்த பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்- அல்லாதார் ஆதரவு கிடைக்காது என அம்னோ நம்புவதால் அது பாஸுடன் ஒத்துழைக்க முன்வந்திருக்கலாம் என்றாரவர்.
பாஸ் கட்சியைப் பொறுத்தவரை அதை இனியும் எதிரணியின் தோழமைக் கட்சியாகக் கருத முடியாது. அது தனித்து விடப்பட்டுள்ளது. அதன் கோட்டையாக திகழும் இடங்களில் மட்டுமே அது ஆதரவை எதிர்பார்க்க முடியும்.
“அதற்கு பரவலான ஆதரவு கிடைப்பது கடினமே. அது ஹுடுட் சட்டம் போன்றவற்றை அமல்படுத்த நினைத்தால் அதற்கு அம்னோவின் ஆதரவு தேவைப்படும்”, என தெங்கு ரசாலி இன்று கோலாலும்பூரில் தெரிவித்தார்..
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது சரிதானோ???
இந்த நாட்டிற்கு இந்த இரண்டு பச்சோந்தி கட்சிகளுமே தேவையில்லை.
பச்சோந்தி நிறம் மாறுகிறது அரசியல்வாதியான நீங்களோ
காலத்திற்கேற்றாற்போல் கொள்கை/ குணம் மாறுகிறீர்கள்!! நம்பி வாக்களித்த 47% மக்களுக்கு பிப்பீ!!..பிப்பீ!! தான்!!
BN மடயணுங்க இவனுங்க BUTT exercise பண்ணும்பொழுது ஹாடி அவங் ஆயுத்தை கிளப்பி ரெட்யாக இருப்பான் நயவஞ்சக ஹாடி அவன் நண்பன் நயவஞ்சக 1 MDB நாயகன்…………..