வெட்கக் கேடு, உலகின் மிகக் கேவலமான ஊழல் பட்டியலில் மலேசியா

2015-இல் ஆறு மிக  மோசமான  ஊழல்கள்  நிகழ்ந்துள்ள  நாடுகளில் மலேசியாவும்  ஒன்றாம்.

வாஷிங்டன்  போஸ்ட் நிறுவனத்தின்  ஒரு  பிரிவாக  செயல்படும்  foreignpolicy.com இரண்டு  நாள்களுக்குமுன்  வெளியிட்ட  அறிக்கை  ஒன்றில்  இதனைத்  தெரிவித்துள்ளது.

2015-இல்,  உலகத்  தலைவர்கள்,  உயர்  நீதிமன்ற  நீதிபதிகள், கால்பந்து  அமைப்பின்  தலைவர்கள்  முதலானோர்  ஊழலில்  சிக்கிக்  கொண்டிருப்பதை  அவ்வறிக்கை  விவரித்தது.

ஊழல்  வரிசைகளின்  பட்டியலில்  மலேசியா  மூன்றாவது இடத்தில்  உள்ளது.  அனைத்துலகக்  கால்பந்து  சங்க  சம்மேளனம்  நைஜிரிய  ஊழல்கள்  ஆகியவற்றை  அடுத்து  மலேசியா  வருகிறது.

ஹொண்டுராஸுக்கும்  குவாட்டமாலாவுக்கும்  நான்காவது  இடம்.  கானா  நீதிபதிகளுக்கும்  ஐநா  பொதுப்  பேரவைக்கும்  ஐந்தாவது,  ஆறாவது இடங்கள்.