அம்னோவுடன் ஒத்துழைப்பு பற்றி ஹாடி பாஸ் தலைவர்களுக்கு விளக்குவார்

takiவரும்   சனிக்கிழமை  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,   சிறப்பு விளக்கக்  கூட்டம்  ஒன்றை  நடத்துவார்.  அதில்  அவர்  அம்னோவுடன்  ஒத்துழைப்பது  என்றால்  என்னவென்பதைக்  கட்சியின்  மற்ற  தலைவர்களுக்கு  விளக்குவார்  எனக்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  தகியுடின்  ஹசான்   கூறியதாக  சினார்  ஹரியான்  செய்தி  வெளியிட்டுள்ளது.

ஆனால்,  தகியுடின்  விளக்கக்  கூட்டம்  நடைபெறும்  இடத்தையும்  நேரத்தையும்  தெரிவிக்க  மறுத்தார்.

“கட்சியின்  மத்திய  தலைவர்கள்,  மாநிலத்  தலைவர்கள்,  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்  அனைவரும்  அதில்  கலந்து  கொள்வர். அது   அம்னோவுடன்   ஒத்துழைப்பது  உள்பட  தற்போதைய  அரசியல்  நிலவரங்கள்  பாஸ்  கட்சியின்  நடப்புகள்  ஆகியவைமீது  கவனம்  செலுத்தும். தெளிவில்லாதவை  தெளிவுபடுத்தப்படும்”, என்றவர்  சொன்னார்.