வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செய்திகள்ஜனவரி 15, 2016
தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
prev
next
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
“தமிழன் மாண்புற வாழ தமிழன் வரலாறு அறிந்து தமிழராக பெருமையுடன் வாழ்வோம் “
உலக மக்கள் அனைவருக்கும் இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துகளுடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. இன்னும் மூன்று மாதங்களில் இன்னொரு தமிழ் புத்தாண்டு (சித்திரை புத்தாண்டாக) வலம் வரும். நல்லதே நடக்கட்டும்.
வேடிக்கையான கருத்து……”இன்னும் மூன்று மாதங்களில் இன்னொரு தமிழ் புத்தாண்டு (சித்திரை புத்தாண்டாக)” ஒரு இனத்திற்கு 2 புத்தாண்டா?
தமிழனுக்கு தை பொங்கலே புத்தாண்டு , இதில் மாற்று கருத்திற்கு “கண்டிப்பாக” இடமில்லை . ஆரியனின் ஆளுமையை இனியும் தமிழனிடம் திணிகாதீர், போதும் .
உலகெங்கிலும் உள்ள தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது திருவள்ளுவராண்டு (2047) இனிய பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
உலகவாழ் தமிழர்கள் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க.
அன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. இன்னும் மூன்று மாதங்களில் இன்னொரு தமிழ் புத்தாண்டு (சித்திரை புத்தாண்டாக) வலம் வரும். நல்லதே நடக்கட்டும்………………..
”
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !
உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம்
கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும்
தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம்
கொள்வோம் !
சித்திரைதான் தமிழ் புத்தாண்டு
தெலுங்கன் கருணாநிதி அவன் இஸ்டத்துக்கு மாத்துனா நாமும் அதை கடைபிடிக்கனுமா?
சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் / தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் எல்லா நலனும் வளமும் பெற்று உயர்வு பெறுவோம்…!
கும்கி கருணா எடுத்த முடிவுகிடயாது.. கருணா களவாணி அதிகாரத்தில இருந்தபோது அறிவிச்சான் .. கருணா அறிவிக்கமுன்னாடியே பலநூறு தமிழ் பெரியோர்கள் அறிந்சர் பெருமக்கள் ஆய்வுசெய்து எடுத்தமுடிவு .. ஆரியனுக்கு ஒன்னுல இருந்து அறுபதுவரை கடிகாரம் போல மீண்டும் மீண்டும் அதுக்குல்லாரேயே சுத்திவரும் !அறுபதை தாண்டாது !! 1–59-60. 61 நகி !மீண்டும் 1/59/60.. இப்போ என்னமோ மன்மத வருசமாம் ! சும்மாவே பயபுள்ளைங்க கோயில் கருவறையகூட விட்டுவைக்க மாட்டேன்குராணுவ ..இதுல மன்மத ….. அனைத்து தமிழர்களுக்கும் எமது பொங்கல் / தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் எல்லா நலனும் வளமும் பெற்று உயர்வு பெறுவோம்…!
KUMKI … கருணாநிதி தன் விருபதிற்கு மாற்றினார் என்பதற்கு சாட்சியை முன்வையுங்கள்… கண்மூடித்தனமாக எழுத வேண்டாம் …
பார்பனன் திணித்ததுதான் சித்திரை வருடபிறப்பு ….
தமிழன் புத்தாண்டை தீர்மானிப்பதற்கு பார்பன நா ….ய் யார் ? சுமார் 60 வருடர்திக்கு முன்பாக தமிழ் அறிஞர்களால் அராய்ந்து எடுகபட்டதுதான் இந்த முடிவு இதை அமல் படுத்த எந்த தமிழ் நாட்டு
அரசும் அதன் பிறகு நாட்டம் கொள்ளவில்லை , காரணம் பார்பனன் பிடி அல்லது ஆளுமை தமிழ் நாட்டின் ஆட்சியில் அவ்வளவு ஆழமாக வேருன்றி இருந்தது . எதோ ஒரு காரணத்திற்க்காக தனது இறுதி ஆட்சியில் கருணாநிதி அதை அமல் படுத்தினார். அதன் பின் வந்த பார்பன ஜெயலலிதா அதை சட்டம் போட்டு மாற்றினாள்.
எவனும் தன விருப்பத்திற்கு கண்மூடித்தனமாக இனியும் மாற்றவேண்டாம் . தை புத்தாண்டை தவிர மற்ற எதையும் தமிழ் புத்தாண்டு என்று தன விருப்பம் போல கூற எவனுக்கும் அதிகாரம் கிடையாது . போதும் உங்கள் ஆரிய மாயை ……
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் …பொங்கலோ போங்கள்
ஆரம்பிசிடிங்கலாடா
உங்கள் ஆரிய புராணத்தையும், இன மொழி விவாதத்தையும் !! தமிழ் உறவுகள் அனைவர்க்கும் “” தமிழ் புத்தாண்டு வாழ்துக்கள் “”” தை முதல் நாள் தமிழ் புத்தாண்டை பொங்கல் வைத்து அரு சுவை உணவுடன் மகிழ்ந்து கொண்டாடுகிறோம் . தேவலையங்கள் பலவற்றில் நாளை தமிழ் கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து ஆராதனை செய்கிறார்கள் . இது தமிழர் திருநாள். மதம் இதில் குறுக்கீடு கிடையாது . தமிழன் மதத்திற்கு அப்பாற்பட்டவன் மனித உணர்வு மிக்கவன் . மதங்கள் தோன்றா
முன் தோன்றியவன் தமிழன். சித்திரை புத்தாண்டு இந்துக்கள் புத்தாண்டு .
சேத்துல உங்க கை ,சோத்துல எங்க கை .உலக வாழ் உழவர்கள் அனைவருக்கும் ,உழவர்தின (பொங்கல்)நல் வாழ்த்துக்கள் .
*குறிப்பாக உழவர்கள் (தமிழ்நாடு )உழவர்கள் (கேரளா ) ,உழவர்கள் (ஆந்திர ) மற்றும் …………………
பொங்கல் தமிழர் திருநாள ? அல்லது உழவர் பெருநாளா?
குஜராத் – மகர் சங்கராந்தி
உத்தர பிரதேசம் -.மகர் சங்கராந்தி
கர்நாடக -மகர் சங்கராந்தி
கேரளா -. பொங்கல் .
The festival of Pongal is celebrated all over India on the same day, but has different names in each region
தமிழர் ஒரு தனிப்பெரும் இனம். அந்த இனத்தின் பண்பாட்டைப் பல நூறு ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக இழந்து வந்துள்ளோம். அதற்குக் காரணம் அந்நியர்கள் தமிழரை ஆண்டும், தமிழர்கள் மீது அயலார் பண்பாட்டை திணித்ததுமே காரணம். இவ்வாறு நாம் இழந்த அடையாளங்களை மீட்டெடுப்தே இக்காலத்தின் கட்டாயாம். இதுவே, மானமுள்ள தமிழனுக்கு தனிப் பெரும் இன அடையாளத்தைக் கொடுக்கும். அதன் அடிப்படையிலேயே மறைமலை அடிகளாரும் இன்னும் பல தமிழ் அறிஞசர்களின் முயற்சியாலும் ஒன்று கூடி முடிவெடுத்ததே தமிழரின் திருவள்ளுவர் ஆண்டு. இப்பொழுது அம்முடிவானது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நாம் ஓர் இனம் ஆனால் நமக்கென்று ஒரு நாள்காட்டி இல்லையென்றால் உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். இதுநாள் வரை நம்மைப் பார்த்துப் பிறர் சிரித்தது போதும். இனியும் அவ்வாறு சிரிக்காமல் இருக்க தமிழர் ஒன்றுபட்டு தை முதல் நாளை நமது புத்தாண்டாக ஏற்றுக் கொள்வோம். இதில் கூட ஒற்றுமையைக் காட்ட இயலவில்லையானால் இனியும் தமிழரின் ஒற்றுமையைப் பற்றிப் பேசாதீர்கள். அதற்கு தங்களுக்குத் தகுதி இல்லை.
நன்றி தமிழ் தமிழன் மற்றும் தமிழர் எழுச்சிப்பறை.
இனிமேல் அவனனவன் இஸ்டத்துக்கு தமிழ் புத்தாண்டை மாற்றபோறான்.
இன்னும் 50 வருடத்தில் இதுதான் நடக்கும்.
தமிழ் புத்தாண்டை மாற்றி மாற்றி போட கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் யார் அதிகாரம் கொடுத்தது.
தமிழர் எழுச்சிப்பறை – யார் அந்த பலநூறு தமிழ் பெரியோர்கள் ?
தமிழ் தமிழன் – யார் இந்த பார்பனர்?
யார் பேச்சையும் கேட்க்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?
கிரிஸ்துவனுக்கு – ஜனவரி 1 தேதி
முஸ்லிம்முக்கு – முஹர்ரம் மதம்
அனால் தமிழனக்கு மட்டும் 2 வருடபிறப்பு.
இந்த மாதிரி போட்டு கோலப்புவதால் தான் அவனவன் மதம் மாறுகிறான்.
எனக்கு விவரம் தெரியும்போது சித்திரைதான் வருடபிறப்பு என்று தெரியும். அதனாலதான் அப்படி எழுதினேன்.
யார்யாருக்கு எந்த மாதம் பிடிக்குமோ அந்த மாதத்தை புதுவருடமா கொண்டாடுங்கள் (எவன் கேட்க்கபோறன்) அல்லது பிறந்த மாதத்தை புது வருடமா கொண்டாடினாலும் சரி.
விருப்பம் போல கூற எவனுக்கும் …….அதிகாரம் கிடையாது .
உழவர் தினம் (பொங்கல் )தமிழர் திருநாள்
கொண்டாட தோரணம்
ஊர் முழுக்க (கோலா லும்பூர்) தேடினேன் !
முருகன் (தமிழ் கடவுள் )அவன் சன்னதி …
சொன்னான் ஒரு தமிழன்
ஒரு வெள்ளி
தோரணம் …ஒன்று ….
தோட்ட புற தான்
நான்
வேண்டுமா?
எனக்கு தொங்கும்
தோரணம் கட்டி கொண்டாட
உழவர் தினம் (பொங்கல் )தமிழர் திருநாள்…
தெலுங்கு மொழி பேசுவோர் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை, சந்திரன் நிலையை வைத்து பின்பற்றப்படும் மாத அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
மலையாள மொழி பேசுவோர் சூரியனின் இடமாற்றத்தைக் கொண்டு வரும் ஆவணி மாதத்தின் திருவோண நட்சத்திரம் பிறக்கும் நாளை ஓணம் பண்டிகையாகவும் அதுவே கொல்லம் வருடப் பிறப்பாகவும் கொண்டாடுகின்றனர்.
தமிழர் பருவ கால மாற்றத்தைக் கொண்டு முன்பனி காலமாகிய தை முதல் நாளை அவர்தம் பொங்கல் புத்தாண்டாகவும், அதுவே திருவள்ளுவர் ஆண்டாகவும் பிரகனப் படுத்திக் கொண்டாடுகிறோம்.
இதில், காலக்கணிதமாகிய பஞ்சாங்கத்தைக் கொண்டு சித்திரை மாதத்தை, வடக்கே வாழ்ந்த ஆரிய வம்சாவளியினர் கோடை கால ஆரம்பத்தைக் கொண்டு சித்திரை மாதத்தை முதல் நாளாக கணித்துக் கொண்டு சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடினர். அவர்தம் பண்பாட்டை தென் இண்டிய மக்களிடையேப் புகுத்தி அதனை தமிழர் புத்தாண்டு என்று நம்பவும் வைத்தனர். அந்த நம்பிக்கையில் இருந்து நாம் தமிழர் மாறி, இன்று பருவ கால அடிப்படையில் புத்தாண்டை கணித்துக் கொண்டு அதனை திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் வைத்துக் கொண்டோம். இது தனித் தமிழர் இன அடையாளத்திற்கு இன்றியமையாததாகும். இதனை இன்று தினசரிகள், நாட்காட்டிகள், வார மற்றும் மாத இதழ்கள், சமூக ஊடகங்கள் என்று பரவலாக பயன்பாட்டில் வந்து விட்டது. அதற்கப்புறமும் விருப்பம் போல் கூற எவனுக்கும் அதிகாரம் கிடையாது என்றால், மேலே கூறப்பட்ட ஊடகங்கள் செய்வது பிழை, தான் சொல்வது மட்டும் சரி கூற இந்த கும்கிக்கு அதிகாரம் கொடுத்தது யாரு?
சித்திரைப் புத்தாண்டை விட்டு தனித்துக் கொண்டாடும் பொழுது, எவரும் கேள்வி கேட்பதில்லை?
இதற்கு முன்னம் கூறியவாறு பிற மொழி பேசுவோர் அவர்தம் புத்தாண்டை, சித்திரை முதல் நாள் விடுத்து வேறு நாட்களில் புத்தாண்டு கொண்டாடும் பொழுது எவரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் தமிழருக்கு பொங்கல் புத்தாண்டு என்று கூறும் பொழுது வரிந்து கட்டிக் கொண்டு வருவோர் தமிழரா? அப்படியானால் இவர் தமிழர் பண்பாட்டை அறிந்துதான் பேசுகின்றாரா அல்லது அறியாமையில் உளருகின்ராரா? தமிழரைத் திருத்த மறைமலை அடியார்கள் போன்று இன்னும் எத்தனைப் பேர் பிறக்க வேண்டுமோ தெரியவில்லை.
வணக்கம். பொங்கல் திருநாள் கொண்டாயடிய அன்பர்கள்
அணைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள். இந்த வருடம் அலை பேசியில் வாழ்த்து அனுப்பும்போழுது, வாழ்த்துடன் இந்த காணோளியும் https://www.youtube.com/watch?v=iL1uLyiruU4 சேர்த்தே அனுப்பினேன் . காரணம் பொங்கலை கொண்டாடும் அன்பர்கள், தமிழர்கள் குழப்பமடையால் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக. நீங்களும் அடுத்த தடவை இப்படியொரு புது முயற்சியை செய்து பாருங்களேன். திரும்பவும் அணைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள். நன்றி வணக்கம்.
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா ? தமிழர்களுக்கு தெரிந்தவரை தை பொங்கல் தான் தமிழர்களுக்கு புத்தாண்டு .. சில அறிவுகெட்ட ஜென்மங்க்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது . புரிந்தாலும் புரியாத மாதிரி நடிப்பானுங்க.. எத்தனை வருடம் கருணாதி முதல் அமைச்சரா இருந்துருப்பார் .. அப்ப என்ன பண்ணிகொண்டிருந்தார் ? (குடும்பத்துக்கு சொத்து சேர்த்து கொடு இருந்திருப்பார்) அப்பவே இந்த விஷயத்தில் தீவிரமா கவனம் எடுத்திருந்தால் இந்த குழப்பம் வந்து இருக்காது .. பார்ப்பன ஜெயலலிதாவுக்கு தமிழ் பற்றி அக்கறை இல்லை .. உலக தமிழ் தலைவன்னு சொல்ற திராவிட கருணாதிக்கு ஏன் இந்த அக்கறை இல்லை ? யாரும் எப்படி வேணுமானாலும் புத்தாண்டை கொண்டாடலாம்னு சொல்ல இந்த கும்கி யாரு? கும்கி யானைய ? இல்லை எருமை மாடா ? நீ தமிழனா இருந்த இப்படி பேச மாட்ட ..ரெண்டும் கெட்டவன இருப்ப …
நன்றி திரு. உழவர் அவர்களே. ஐயா முனைவர் திரு, அ. நாகப்பன் போன்று நம் நாட்டுத் தமிழர்களுக்கு இன்னும் பல தலைவர்கள் தேவைப்படுகின்றது. அப்படி தொடர்ந்து அறிவுப் பூர்வமான சமூக, பண்பாட்டு சமய அறிவுரைகளைக் கொடுத்து வந்தால்தான் இன்னும் ஒரு சில ஆண்டுகளிலாவது நாம் சுய தமிழர்களாக வாழ முடியும். இப்படி சமய ரீதியிலும் சில மூட நம்பிக்கைகளைக் களைந்து, அறிவுப் பூர்வமான சமய வாழ்க்கை மேற்கொள்ள வேண்டி மலேசியா சைவ சமய பேரவை “சிவனருள்” மாத இதழ் விநியோகித்து வருகின்றது. அவ்விதழ் விநியோகத்தை தடை செய்யுமாறும், ஐயா முனைவர் திரு. அ. நாகப்பன் அவர்கள் இந்து ஆலயங்களில் சொற்பொழிவு நடத்துவதை தடை செய்யுமாறும் மலேசிய இந்து சங்கம் ஆலயங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. எப்படியும் தமிழரை மூட நம்பிக்கையில் வைத்து ஆலயங்கள் நடத்தும் சமய வியாபாரத்தை தொடர்ந்து வளர்க்க பாடுபடும் மலேசிய இந்து சங்கத்திற்கு நன்றி. தமிழரே விழித்துக் கொள்ளுங்கள். இந்து சங்கத்தின் தடை தமிழரின் சமய முன்னேற்றத்திற்கான தடை என்று புரிந்துக் கொண்டு அதனை தகர்த்தெறியுங்கள்.
தை முதலும் வேண்டாம் , சித்திரை முதலும் வேண்டாம். இனிமேல் ஐப்பசி முதல் நாள் வருட பிறப்பு. இனிமேல் தையா / அல்லது சித்திரை யா என்றபிரச்சனை ஒரு முடிவிற்கு வருகிறது. அதாவது ஐப்பசி முதல் நாள். இது எப்படி இருக்கு ?
சித்திரை முதல்நாளில், அண்ட சராசரமும், பூமத்திரேகை நேர் கோட்டில் இருந்து, இரவையும் பகலையும் சமமான அளவில் பிரித்து கொண்டு, எல்லா கிரகங்களுக்கும், முதல் நாளை ஆரம்பிக்கும் நிலையை கொண்டது. இங்கிருந்தே நான்கு ஆண்டுங்களுக்கு ஒரு முறை வரும் leap year கணிக்க படுகிறது. மற்ற அணைத்து மாற்றங்கலும் நிர்ணயிக்க படுகிறது. இதை NASA விற்கு முன் கண்டு பிடித்த தமிழர்கள், இதுவே தமிழர்களின் புத்தாண்டு என முடிவுசெய்தனர். அவர்களுக்கு தலைவணங்குகிறேன். என்ன ஒரு கண்டு பிடிப்பு. தமழிலண்டா….(சற்று திமிராக)… உழவு காலத்திற்கு பின்தான் பொங்கல் வந்தது. அதற்க்கு முன் இருந்த கற்காலத்திலும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். அதுவே சித்திரை முதல் நாள்.
உழவர் திருநாளா அல்லது தமிழ்ப் புத்தாண்டா?? ஆளுக்கொரு விளக்கத்தை அள்ளித் தள்ளுகிறீர்!!! இந்திய பார்ப்பனர்களுக்கு சித்திரை புத்தாண்டு என்றால் தமிழர்களுக்கு மட்டும் திடீரென்று தை புத்தாண்டு பிறந்த மாயை யாதோ?? திலீப் அவர்களின் கூற்றும் சிந்திக்கத்தக்கதே.
காலகணிதமாகிய (சோதிடம்) நாராயனீயம், வாராகம் ஆகிய நூல்களைத் தமிழர் கண்டு பிடித்தனரா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும். அப்படி பொய் சொல்லத் தெரியாவிட்டால் வாயை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். அவை தோன்றியது வடபாலரிடம். மார்ச் மாதம் 21-ம் தேதி சூரியன் மட்டும் பூமத்திய ரேகைக்கு நேர் உச்சியில் இருக்கும். அப்பொழுது இரவும் பகலும் சரி சமமான நிலையில் வட தென் துருவ பகுதிகளுக்கு கிடைக்கும். “அண்ட சராசரமும், பூமத்திரேகை நேர் கோட்டில் இருந்து, இரவையும் பகலையும் சமமான அளவில் பிரித்து கொண்டு” என்ற அண்டப் புளுகை எல்லாம் அவிழ்த்து விட வேண்டாம். சோதிடத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக
வைத்ததற்கு காரணம், (1) சூரிய நிலையைக் கொண்டு சோதிடத்தில் மாதங்களைப் பிரித்தத்தால்; (2) மேஷ இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது அது உச்ச நிலையில் பலமான கிரகமாக இருக்கும். இதுவே சோதிடத்தில் அந்நாளை புத்தாண்டாக வைத்தர்க்குக் காரணம். இதற்கும் தமிழரின் பருவ காலத்தை ஒட்டிய உழவுத் தொழிலுக்கும் எவ்வித காரணமும் இல்லை. இனியும் தனக்குத் தெரியாதனவற்றைத் தெரிந்த மாதிரி தமிழரிடம் பொய் சொல்லி அவர்தம் அறிவை திசை திருப்ப வேண்டாம். இப்ப தமிழர் விழித்துக் கொண்டனர். இனியும் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது.
பார்பனர்கள் என்ன உழவுத் தொழிலா செய்தனர்? தை பொங்கல் புத்தாண்டைக் கொண்டாட. இது தமிழர் பண்பாட்டையும், இயற்கையை வணங்கும் வழக்கமும் இருந்த காரணத்தால் வந்த கொண்டாட்டம்.
முன்பு பத்தினி தெய்வம் கண்ணகியா ? அல்லது மாதவியா ? என்று ஆராய்ச்சி பண்ணினோம் ! இப்போது நம் புத்தாண்டு தை மாதமா ? அல்லது சித்திரையா ? என்ற படா ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோம் !! நம் இனத்துக்கு வெளியிலே தலைக்கு மேல் பிரச்சனைகள் இருக்கு , அதை முதலில் பார்ப்போமா !!!!
“சேடிஸ்ட் எம்.ஜி. ராமச்சந்திரன்” பொறுக்கி அரசியலில் தமிழ
இந்த பொங்கல் மக்கள் நல்லா இருக்க வாழ்த்துக்கள் BN madrum PAS அரசியல்வாதிகள் அழியவும் வாழ்த்துக்கள்
Anonymous…… எம்.ஜி. ராமச்சந்திரன் விடுதலை புலிகளுக்கு ஆயுதமும் பணமும்
கொடுக்கும்போது சேடிஸ்ட் என்பது தெரியாதா ?
எதற்கு பஞ்சாயத்து ?
https://en.wikipedia.org/wiki/Puthandu
MGRதமிழர் ஆக இல்லாவிடாலும் தமிழுக்கும் ..தமிழர் விடுதலைக்கும் செய்த தன்னலம் அற்ற உதவிகள் என்றும் நினைவு கூறப்படும் ..இவர் தமிழை விற்று பிழைக்கவில்லை
Equinox எனப்படும் வழிமுறையை (அளவை) கொண்டே 6 மாதத்திற்கு ஒருமுறை நேர்கோடுகளை கிரகங்கள் நிர்ணயிக்கின்றன. மார்ச் மாதம் 21-ம் தேதி மட்டும் அல்ல தாங்கள் குறிப்பிடும் முறையில் தேனீ அவர்களே. அது செப்டம்பர் மாதம் 23-ம் தேதியும் கூட. இது பிந்தைய அறிவியல். வெள்ளையர்கள் கண்டு பிடித்தது. நாம், தமிழர்கள், அல்லது இந்தியன்கள், அல்லது எதுவோருவர்கள், அன்றைய காலத்தில், 24 நான்கு நாட்களுக்கு பின் இந்த நிலையை சித்திரை முதல் நாளில் இருந்து கணித்து வருகிறோம். தங்கள் முந்தய அறிவியலையும், பிந்தைய அறிவியலையும் குழப்பி மீன் பிடிக்க பார்க்ரீர்கள் ….. இதனால் தான் 4 விதமான ஜாதகங்கள் அல்லது பஞ்சாங்கங்கள் தமிழர்கள் கொண்டுள்ளோம். கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம், மணிமேகலை பஞ்சாங்கம், கிருஷ்ணாமூர்தி பஞ்சாங்கம் என்று. இன்னும் சம்ஸ்கிருத பஞ்சாங்கத்தை படி நான் பேசவில்லை. மூன்று பஞ்சாங்கங்கள் ஒரு சேர இருப்பதும், ஒரு பஞ்சாங்கம் (பிந்தைய பஞ்சாங்கம்), 21-24 நாட்கள் இடைவெளியிலும் இருக்கும். தேனீ அவர்களே தாங்கள் குறிப்பிடும் மார்ச் மாதம் 21-ம் தேதி எந்த விதத்திலும் பொங்கலையும் புத்தாண்டையும் இணைக்கவில்லை, அல்லது பாலமும் அமைக்க வில்லை. எப்படி பார்த்தாலும் தை பொங்கல் மற்றும் புது வருடம் எங்கும் ஒட்டவில்லை ….. மாட்டி கொண்டீர்களா ? ஆனால் இரவையும் பகலையும் சமமாக பிரிக்கும் ஒரு அறிவியலை, தமிழர்கள் அன்றே கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் சித்திரை முதல் நாளை வருட பிறப்பாக கொண்ட்டடுகிறோம். பின் குறிப்பு: இயேசு கிஸ்து, டிசம்பர் 24 இருந்து ஜனவரி 4 ஆம் திகதிக்குள் எதோ ஒரு நாளில் தான் பிறந்தார். யாருக்கும் சரியாக தெரியாது. ஆனால் கிறிஸ்துவர்கள், அதை முதல் நாளிலேயே கொண்டாடி விடுவார்கள். டிசம்பர் 25.
” சுறவத் திங்கள் முதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு ”
அனைவருக்கும் எமது …..
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ….!!
anonymous நீங்கள் சொல்வது உண்மையே. நல்லது செய்தோரை மதிப்பது உண்மையான மனிதாபிமானம். நேற்று தமிழ்நாட்டு தொலைகாட்சியில் ஒரு ஜைனவர் நல்ல தமிழ் பேசி பொங்கலின் சிறப்பையும் அவர்கள் தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து தமிழர்கள் ஆகிவிட்டனர்– என்னைப்பொருத்தமட்டில் நாம் அவர்களை தமிழர் என்றே ஏற்கவேண்டும்.வேறு பாடு காணக்கூடாது.
விக்கிபீடியா தகவல் சேகரிப்பு மையம். அவ்வளவே. அவர்கள் தமிழர்களுக்காக எதையும் நிர்ணயிப்பதில்லை. அங்கு பதிகப் பட்ட தமிழ் புத்தாண்டு இன்று தமிழ் நாட்டில் இருக்கும் நிலையைப் பொறுத்தது. ஒருவர் போட்ட சட்டத்தை இன்னொருவர் உடைப்பது தமிழ் நாட்டு அரசாங்கத்தில் பெரிய விஷயமல்ல. மறுபடியும் ஆட்சி மாறும்பொழுது புதியதோர் சட்டம் போடப் படுவதையும் தடுக்க முடியாது. அங்கு, இன்னமும் பாமரத் தமிழன், மேலாதிக்க தமிழன் மற்றும் வந்தேறிகளின் கட்டுப் பாட்டில் உள்ளான். வல்லான் வகுத்தது வாய்க்கால் என்று தமிழ் நாட்டில் சொல்லலாம். அது இங்கு செல்லாது. நாம் தமிழர் இங்கு யாருக்கும் அடிமை அல்ல. நமது தலை எழுத்தை நிர்ணிக்க நமக்குத் தனி மனித உரிமையும், சமூக கடப்பாடும் உள்ளது. அதன் அடிப்படையில் நாம் தமிழர் பொங்கல் புத்தாண்டு தை முதல் நாள் கொண்டாடுகிறோம். அவ்வாறு கொண்டாதவர்கள் விட்டு விடுங்களேன். எதற்கு வீண் வாதம் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டும். மார்ச் 21-ம் தேதியை குறிப்பிட்டது, சித்திரை முதல் நாளில் “அண்டசராசமே” ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்று குறிப்பிட்டதற்கான பதில். இந்த பஞ்சாங்க புராணம் எல்லாம் வேண்டாம். ஒரு பஞ்சாங்கத்தை வைத்துக் குப்பை கொட்டினாலே போதும். பத்து பஞ்சாங்கம் தேவை இல்லை. இதை மேலும் விவாதித்தால் அப்புறம் இப்பகுதி சோதிடப் பகுதியாக மாறி விடும்.
தேனீ ஐயா, உங்களின் கருத்து பதிவு சிறப்பாக இருந்தது ! வாழ்த்துக்கள் நண்பரே !
தேனீ அவர்கள் இப்படி எழுதி உள்ளீர்கள்: “விக்கிபீடியா தகவல் சேகரிப்பு மையம். அவ்வளவே. அவர்கள் தமிழர்களுக்காக எதையும் நிர்ணயிப்பதில்லை.”…… உலகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தமிழ் விக்கிபீடியா, இணையதளத்தில் வழங்கி உள்ளது. தமிழ் இன்று இணையதள, பல இடங்களில் உலா வர விகிபெடியாவும் ஒரு காரணம். தேனீ அல்ல! “அங்கு பதிகப் பட்ட தமிழ் புத்தாண்டு இன்று தமிழ் நாட்டில் இருக்கும் நிலையைப் பொறுத்தது” … இதுவும் நீங்கள் தான். அப்படி என்றால் தமிழ் நாட்டு தமிழர் வேறு, மலேசியா தமிழர் வேறு என்று பொருள்படும். உங்களை யாரும் அடிமை என்று சொல்லவில்லை தேனீ அவர்களே. அப்படியே நீங்கள் அடிமையாக ஆசைபட்டாலும், உங்களை அடிமையாக வைத்துகொள்ள எவன் வருவான் ? அதோடு அவன் தமிழ் கிறுக்கன் ஆகிவிடுவான். சரி பரவா இல்லை போகட்டும் . …..”அதன் அடிப்படையில் நாம் தமிழர் பொங்கல் புத்தாண்டு தை முதல் நாள் கொண்டாடுகிறோம்.” என்று எழுதி உள்ளீர். பிறகு நீங்களே “வல்லான் வகுத்தது வாய்க்கால்” என்று எழுதினால், அப்படி என்றால் நீங்கள் இங்கே வல்லவனாக மாறி “தமிழர் பொங்கல் புத்தாண்டு” என்னும் கருத்தை பதிய வைக்க முயற்சி செய்கிறீர்கள். தை முதலும் வேண்டாம் , சித்திரை முதலும் வேண்டாம். இனிமேல் ஐப்பசி முதல் நாள் வருட பிறப்பு. போதுமா ?
en thaai thamizh …ஒருவர் 30 வருடம் ஆங்கிலம் பேசினால் அவர் ஆங்கிலேயரா ? தமிழ் பேசுபவனெல்லாம் தமிழன் ஆகிவிடமுடியாது , ஏற்றுக்கொள்ளவும் முடியாது. தமிழகத்திலுள்ள பொருளாதார வாய்ப்புகளை அனுபவிக்கவே அவர்கள் அவ்வாறு நடக்கின்றனர் . நான் நன்றாக மலாய் பேசினால் மலைகாரர் ஆகிவிட முடியுமா ?
யோசித்து எழுதவும் ….
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
செம்பருத்தி குடும்பத்தினருக்கு தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்
தில்லிப் 2…அவர்களே, தமிழ் புத்தாண்டு என்று வாழ்த்து பிரசூரித்த செம்பருத்தி ஆசிரியர் அவர்களை கேளுங்கள் அந்த வாழ்த்து சரியா என்று …
ஒன்றை தெரிந்து கொள்ளவும், விக்கிபீடியா இந்தியாவை பற்றி எழுத வேண்டுமானால் அல்லது எதாவது விளக்கம் வேண்டும் என்றால் இந்திய நடுவண் அரசை தான் கேட்குமே தவிர தமிழ் நாட்டை அல்ல .நடுவண் அரசு எதை கூறுகிறதோ அதுதான் தன அகப்பக்கத்தில் வெளியிடும் . அப்படி என்றால் விகிபெடியாவில் உள்ள பொருள் யாருடையது ? விக்கிபீடியா எவ்வாறு செயல்படுகிறது இன்னும் விளக்கம் தேவையோ ?
நன்றி திரு மு.த. நீலவானன் அவர்களே. நாம் தமிழர் ஒன்றுபட்டு நமது சமுதாயத்தை அறிவுடையடைய மேன்மக்களாக உயர்த்துவோம். இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க.
tamil tamilan – யாதும் ஊரே யாவரும் கேளீர்- இதை தமிழர் பூங்குன்றனார் தான் நமக்கு அக்காலத்திலேயே கூறினார். எனினும் உங்களுடன் வாக்கு வாதம் புரிய விர்ப்பம் இல்லை. உங்களின் தமிழ் பற்றிற்கு வாழ்த்துக்கள். நாம் பெருந்தன்மையுடன் யாவரையும் ஏற்க்ககூடியவர்களாக இருந்தும் நம்மை மட்டரகமாக என்னும் மற்ற இனத்தவர்களைப்பற்றியும் எனக்கு தெரியும்-அடங்காத வெறுப்பும் கோபமும் வருகிறது ஆனாலும் என்னுடைய பகுத்தறிவும் பெருந்தன்மையும் அவர்களைப்போல் நடக்க விடுவதில்லை– இப்படி இருந்தும் தமிழ் என்னுயிர் அதை என்றுமே விட்டு கொடுக்க மாட்டேன். தமிழர் என் உடன் பிறப்பு சாதிவெறி பிடித்தவர்களைதவிர. அத்துடன் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்- சமீபத்தில் என்னுடைய முன்னோர்களைப்பற்றி தெரிந்து கொள்ள மரபு அணு சோதனை செய்து பார்த்ததில் என்னுடைய முன்னோர்கள் 170000 aandugalukku முன் ஆபிரிக்காவில் இருந்து இந்திய/தமிழ் நாடு வந்தடைந்தனர். அத்துடன் neanderthal எனக்கூறப்படும் அக்காலத்து இனமும் 2% கலப்பு இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். இது உங்களுக்கு ஏர்போ என்று எனக்கு தெரியாது. நான் அறிவியலை ஏற்று கொள்பவன் . இது ஒரு தெரிவிப்பே அன்றி வேறு ஒன்றுமில்லை. நாம் தமிழர்கள் -நமக்குள் ஒற்றுமை தேவை.
பொங்கல் வாழ்த்தில் ஆரம்பித்து இப்போ MGR வரை வந்து விட்டது.
ஐயா தமிழ் தமிழன் அவர்களே, அவன் தப்பு செய்கிறான் இவன் தப்பு செய்கிறான் என்று கூறும் நீங்கள், எப்படி தை முதல் நாள் தமிழர்கள் புத்தாண்டு என்று விளக்க முனைய வில்லையே ? சரி உங்கள் வழிக்கே வருகிறேன். எப்படி தை முதல் நாள் தமிழர்கள் புத்தாண்டு என்று முடிவுக்கு வந்தீர்கள் ? அதை மக்களுக்கு விளக்குங்க சார் ! இபவெல்லாம் ஒரு பேஷன் : அவன் தப்பு செய்கிறான் இவன் தப்பு செய்கிறான் என்று கூறி விட்டால் நீங்கள் செய்வது சரி என்று ஆகிவிடும் அல்லவா ? இன்று நீங்கள் உங்கள் அறிவிற்கு செய்ததை நாளை வேறு ஒருவன் விமர்சிச்சி அவன் அவனுடைய அறிவிற்கு எட்டியதை எழுதுவான்…இப்படி பல குழப்பங்கள் வளந்த பிறகுதான் இன்று தை முதல்நாள அல்லது சித்திரை முதல்நாள என்று பட்டி மன்றம் நடத்துகிறோம். நீங்கள் குறும் இதே கருத்தை வேறு சிலர் தை முதல் நாள் தமிழர் திருநாள் என்கின்றனர். ஒட்டு மொத்தமாக இதில் கவனத்தை செலுத்தியதில் 1MBD உழல், ம இ கா வின் துரோகம் என்று எல்லவற்றையும் மறந்து விட்டோம். இப்படி காலத்திற்கும் சில குழப்படிகள். அதன் விளிம்பு : இன்று வரை தமிழ் எப்படி தோன்றியது வலராறு சரி வர தெரியாது.
அருண் ரவி