கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஷியாரியா நீதிமன்றத்துக்கும் சிவில் நீதிமன்றத்துக்குமிடையில் சர்ச்சைகள் ஏற்படாதிருக்க 1988-இல் அரசமைப்பில் இணைக்கப்பட்ட சட்டவிதி 121(1ஏ)-க்கு நல்லதொரு விளக்கமாக அமைந்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகம்மட் ரவுஸ் ஷரிப், தம் 33-பக்கத் தீர்ப்பில், இஸ்வான் தன் வழக்கை ஷியாரியா நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றதால்தான் சர்ச்சை உருவானதாகக் கூறினார்.
“சிவில் முறைப்படி செய்துகொண்ட திருமணத்தை முறித்து விடுமாறு கேட்டுக்கொள்ளும் முன்னாள் கணவரின் மனுவை விசாரிக்கும் உரிமை ஷியாரியா நீதிமன்றத்துக்கு இல்லை. சிவில் திருமணத்தில் பிறந்த குழந்தைகளின் பராமரிக்கும் உரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரமும் ஷியாரியா நீதிமன்றத்துக்கு இல்லை.
“முஸ்லிம் சட்டப்படி செய்யப்பட்ட முஸ்லிம் திருமணங்களில் மட்டுமே மணவிலக்கு, குழந்தை பராமரிப்பு போன்ற விவகாரங்களை அது விசாரிக்க முடியும்.
“வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் முஸ்லிம்- அல்லாதாராக இருந்தால்கூட அதை விசாரிக்க ஷியாரியா நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை”, என அவர் தீர்ப்பில் கூறினார்.
இனிமேல் இந்த இரண்டு நீதிமன்ற தீர்ப்பு என்ற காரண காரியத்தை எல்லாம் காட்ட வேண்டாம். யார் ஒருவர் சிவில் நீதிமன்ற உத்தரவு இல்லாமால் பிள்ளைகளைக் கவர்ந்து செல்கிறார்களோ அவருக்கு அங்கேயே கொடுக்க வேண்டியதை கொடுத்து பிள்ளைகளை அழைத்து வரலாம்.
அதிசய சட்டங்கள் இங்குதான் உள்ளது.
காவல்துறை தலைவரே உசண நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கூத்து இங்குதான் நடக்கின்றது.சாமானியனோ அல்லது எதிர்கடசியை சாரந்தவர்களோ இவ்வாறு செய்திருந்தால் சட்டம் தன் கடமையை மின்னல் வேகத்தில் செய்திருக்கும். த்த்தூ கேடுகெட்ட அம்னோ அரசு.
தெரியிது தான அப்புறம் யா இப்படி நடக்குது ..
இதுதான் எந்த மடையனுக்கும் தெரியுமே–உங்களைத்தவிர.
எல்லாம் சரி! அம்னோக்காரன் இதனை ஒத்துக்குவானா?