“நமது இளைஞர்கள் மேல் நிலையை அடைவதற்கு வாய்ப்பளிக்கும் கல்வி முறையே நமக்குத் தேவை. கீழ் நிலைக்குச் செல்வதற்கான போட்டியில் அல்ல.”
ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதில் தொடர வாய்ப்பு
பார்வையாளன்: இப்போது முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும் வாய்ப்பு இருக்காது என்பதே அந்த முடிவின் அர்த்தமாகும். ஆகவே கல்வி அமைச்சர் தான் நினைத்ததைச் சாதித்து விட்டார். ஆனால் அதன் நிறைவேற்றம் சற்று தாமதமாக இருக்கும்.
மலாய் போதான மொழிப் பள்ளிக்கூடங்களில் தரம் வீழ்ச்சி அடைவதே உண்மையான பிரச்னை ஆகும். மற்ற பொதுச் சேவைத் துறைகளைப் போன்று அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்களைச் சேர்ப்பதும் பதவி உயர்வு வழங்குவதும் இன அடிப்படையில் அமைந்துள்ளது. அதனால் இரண்டாம் தரத்தைச் சேர்ந்த திறமையில்லாதவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பதவி உயர்வுகளில் அத்தகையவர்களுக்குப் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டு அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர்.
தங்களுக்கு வாக்கு வங்கியாக இருக்கும் அத்தகைய திறமையற்றவர்களுக்கு வேலைகளை கொடுக்க வேண்டிய நிலை அம்னோவுக்கு உள்ளது. அந்த முறையினால் பெரிய இழப்பை எதிர்நோக்குவது, தரம் குறைந்த கல்வியைப் பெறும் பெரும்பான்மை மலாய்க்காரர்களுடைய பிள்ளைகளாகும்.
பொரும்பாலான சீனர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு நடத்தப்படும் சீன அல்லது தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகின்றனர். அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் அவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தை போதானா மொழியாகக் கொண்ட பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவர்.
அதனை வாக்குகளைக் கவருவதற்கு தேர்தல் பிரச்னையாகவும் பக்காத்தான் ராக்யாட் பயன்படுத்தக் கூடும்.
உங்கள் அடிச்சுவட்டில்: பார்வையாளன் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களைப் போதிக்கும் முறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேசியப் பள்ளிகளின் தரம் மோசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அதற்கு காரணம் பெரும்பாலான ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் திறமையே இல்லை. பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கூடங்களை நிர்வாகம் செய்வதில் அக்கறை காட்டுவதே இல்லை.
தேசியப் பள்ளிகளை யாரும் மதிப்பதில்லை என்பதை கல்வி அமைச்சர் ஏற்றுக் கொள்வது அவசியமாகும். அதற்கு மொழி காரணம் அல்ல. அந்தப் பள்ளிகளில் காணப்படுகின்ற வேலைப் பண்பாடும் காலம் தாழ்த்திய சிந்தனைகளுமே காரணங்களாகும்.
டிசி: அந்த முடிவுக்கு அரசியல் காரணமோ இல்லையோ, துணைப் பிரதமர் ஒரு வழியாக ஒப்புக் கொண்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என் பிள்ளைகளுக்கு அதனால் நன்மை கிடைக்கும் வரையில் நான் நிம்மதி அடைந்துள்ளேன்.
என்னை சுய நலக்காரன் என்றோ குறுகிய சிந்தனையைக் கொண்டவன் என்றோ நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நாடு நல்ல விதமாக மாறும் என்ற நம்பிக்கையே எனக்குப் போய் விட்டது.
விசுவாசமான மலேசியன்: பெற்றோர்களுடைய சில கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த கல்வி அமைச்சைப் பாராட்ட வேண்டும். ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை கற்கும் மாணவர்கள் அதனை பள்ளிப் படிப்பு முடியும் வரையில் தொடர அது அனுமதித்துள்ளது.
அந்தக் கொள்கையை பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் எதிர்க்கும் வேளையில் அரசியல் ரீதியில் சாதகமானதைப் பின்பற்றாமல் சரியான முடிவைத் துணிச்சலாக எடுத்த பிஎன்-னை அவசியம் பாராட்ட வேண்டும்.
பூச்சோங் மாலி: அந்த முடிவு நீண்ட கால அடிபப்டையில் நமது பிள்ளைகளின் ஆங்கில மொழி ஆற்றலை எப்படி உயர்த்தும் என்பது எனக்கு புரியவில்லை.
நாம் கணித, அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதற்குப் போராடாமல் ஆங்கில மொழி நல்ல முறையில் போதிக்கப்படுவதற்கு போராட வேண்டும். பள்ளிக்கூடங்களில் எல்லா நிலைகளிலும் ஆங்கில மொழிக்கான நேரம் கூட்டப்பட வேண்டும். ஆங்கில மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கு அதிக வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
இப்போது இரண்டு அடி பின்னுக்குச் சென்று ஒர் அடி முன்னுக்கு சென்றுள்ள துணைப் பிரதமர் முஹைடின் யாசினின் அரசியல் ரீதியிலான முடிவுக்குப் பலர் நன்றி தெரிவிக்கின்றனர்.
மஞ்சித் பாட்டியா: இந்தக் கொள்கை மாற்றம் உண்மையில் அரசியல் ரீதியில் பின்வாங்கியிருப்பதற்கு ஒப்பாகும். அவ்வாறு பின் வாங்கியுள்ளது அரசியல் முடிவு என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மலேசியப் பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் இது குறுகிய கால வெற்றியே. அரசாங்கம் பின்வாங்கியிருப்பது குறுகிய காலத்திற்கே.
பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் பாஹாசா மலேசியாவுக்கு மாறுவது அம்னோ/பிஎன் வெற்றி பெறும் அளவைப் பொறுத்து வெகு வேகமாக அமலாக்கப்படும்.
மலேசியக் கல்வி முறை எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு டாக்டர் மகாதீர் முகமட், அப்துல்லா அகமட் பாடவி, நஜிப் ரசாக், முஹைடின் ஆகியோர் கல்வி முறையில் அரசியலைப் படிப்படியாகக் கலந்ததாகும்.
மலேசிய பள்ளிக்கூடப் பாடத் திட்டம் முழுவதும் சிதைக்கப்பட்டு விட்டது. மலேசிய ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி ஆற்றலே கிடையாது. போதிக்கும் முறைகளும் தரமற்றவை.
சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் பெரிய அளவில் அடிப்படை மாற்றம் தேவை. ஆனால் அதனைச் செய்வதற்கு எண்ணமோ அரசியல் உறுதியோ கிடையாது.