விதிமுறைகளை மீறியதற்காக அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டிபிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பேங்க் நெகாரா வெளியிடாது.
பேங்க் நெகரா தனிப்பட்டவர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு விதிக்கும் அபராதத் தொகையை வெளியில் சொல்வதில்லை என பேங்க் நெகாராவின் புதிய ஆளுனர் முகம்மட் இப்ராகிம் இன்று கூறினார்.
“அபராதத் தொகைகளின் மொத்த கணக்கு மட்டுமே வெளியிடப்படும். அதை எங்களின் நிதி அறிக்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
“வெளிநாட்டில் உள்ள பணத்தை மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பத் தவறியதற்காக 1எம்டிபிக்கு அபராதம் விதிக்கப்பட்டது”, என்று பேங்க் நெகாராவில் தமது முதலாவது செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
எவ்வளவோ மூடி மறைத்து விட்டீர்கள். இதை மூடி மூடி மறைப்பதில் ஆச்சரியமென்ன! பாவம்! நன்றியுள்ள நாய் தன் எசமானுக்கு வாலாட்ட வேண்டுமல்லவா?
//அபராதத் தொகைகளின் மொத்த கணக்கு மட்டுமே வெளியிடப்படும்// இளிச்சவாய் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்பது முடிவான பின்பு அதை மட்டும் வெளியிட்டு ஆகப்போவது என்ன ? புதிய ஆளுநர் முடியை மட்டும் வெள்ளைக்காரரைப்போல் வைத்துக்கொன்டு மூளையை வெறெங்கோ அடகுவைத்துவிட்டார் என்பது மட்டும் புரிகிறது. தங்கள் சேவை சிறக்கட்டும், தங்களின் நிதி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் என்றென்றும் ஏழைகளாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், தங்களுக்கு வழங்கப்படும் வசதிகளுக்கும், விருதுகளுக்கும் பஞ்சமே இராது.
இந்த நாட்டில் ஒழுங்கான ஆட்சியா நடக்கிறது!வேண்டியவர்களுக்கு ஒரு சட்டம் வேண்டாதவர்களுக்கு ஒரு சட்டம் என்ன செய்ய ஆளும் கட்சி வைப்பதுதானே சட்டம்