மலேசியாவை “ஒரு தேசிய சிறைக்கூடமாக மாற்றும்” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் திட்டத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் கூறினார்.
“மலேசியா வெளிப்படையான, ஜனநாயக நாடா அல்லது கம்முனிஸ்டு ஆட்சி நடக்கும் வட கொரியா போன்று அடக்குமுறைக்கு உட்பட்ட சமுதாயமாக தரம்தாழ்ந்து போய்விட்டதா?”, என்று லிம் வினவினார்.
கூட்டரசு அரசமைப்பை மீறினார்கள் என்று தனிப்பட்ட சிலரின் பயணங்களுக்குத் தடை விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய லிம், மனித உரிமைக் கழகம் (சுஹாகாம்) அமைச்சரவைக்குப் பாடம் நடத்த வேண்டும் என்றார்.
“சுஹாகாம் மலேசிய அரசமைப்பு குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் ஏதுமறியாதிருக்கும் அமைச்சரவை மொத்தத்துக்கும் மலேசியர்களின் அரசமைப்பு உரிமைகள் குறித்து பாடம் நடத்த வேண்டும்”, என்று லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஐயா லிம் அவரகளே உங்களுக்கு தெரியாததா–பதவியிலும் அதிகாரத்திலும் உள்ளவன்கள் எது வேண்டுமானாலும் செய்ய முடியும்– இதனால் தான் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கம்பி எண்ணினீர்கள்– நியாயம் நீதி என்று ஒன்று இருக்க வேண்டும்– ஆனால் இங்குதான் நீதி நீதி என்ன என்று விளங்காத அறிவிலிகளின் கையில் மாட்டிக்கொண்டு கழுத்து நெரிக்கப்பட்டு இருக்கிறதே.
நீங்கள் போடாத நாடகமா? இப்போ காக்காவை தூக்கோ தூக்குன்னு தூக்க காரணம்? பெரிய அமௌண்ட்டா கரெக்ட் பண்ணிட்டீங்களா? ஆட்சியை கவிழ்க்க மும்முரமா வேலை செய்யரிங்கே!