சுங்கை புசார் இடைத் தேர்தலை வைத்து சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலிக்குக் குழிபறிக்கும் முயற்சிகளும் நடக்கலாம் என அம்னோ சட்டமன்ற உறுப்பினர் சாடியா பொஹான் ஆருடம் கூறியுள்ளார்.
பிகேஆர் துணைத் தலைவரான அஸ்மின் அலியை மட்டம் தட்டுவதற்காக பிகேஆரிலும் பக்கத்தான் ஹராபானிலுமுள்ள அவரின் எதிரிகள் முயல்வார்கள் என்றாரவர்.
ஜூன் 18-இல் நடைபெறவுள்ள சுங்கை புசார் இடைத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க அஸ்மின் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த இடத்தை விட்டுகொடுக்கப் போவதில்லை என பாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
2013 பொதுத் தேர்தலில் அங்கு போட்டியிட்டது பாஸ் கட்சிதான். அது 400 வாக்குகளில்தான் அங்கு தோல்வி கண்டது.
“எந்தக் கட்சி வேட்பாளர் அங்கு களமிறக்கப்பட்டாலும் அவருக்குக் குழிபறிக்கும் முயற்சிகள் நடக்கப்போவது உறுதி”, என அந்த கோத்தா டமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் அம்னோ இணையத் தளத்தில் கூறினார்.