எதிர்வரும் இடைத் தேர்தல்கள் சம்பந்தமாக பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் இடமிருக்கிறது என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார்.
பாஸ் அதன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காது. ஆகவே இது குறித்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பிகேஆரை அமனா கேட்டுக்கொண்டிருந்தது குறித்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
தம்மைப் பொறுத்தவரையில், வேட்பாளர் நியமன நாள் (ஜூன் 5) மற்றும் இடைத் தேர்தல் நாள் (ஜூன் 18) ஆகியவற்றுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்தை இடமிருக்கிறது என்றாரவர்.
மக்களின் பொருட்டு நாம் பேச வேண்டியுள்ளது. நாம் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று வான் அசிஸா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆமாம்டி – உங்களுக்கு வெட்டு வைக்கும் ஈன ஜென்மங்களுக்கு வகை செய்யுங்க. இன்னுமா டி உங்களுக்கு புத்தி வரவில்லை?
தற்போதைய எதிர்கட்சிகளில் சரியான தலைவர்கள் இல்லை. இந்த சின்ன விஷயத்தைக் கூட தீர்த்து வைக்க ஆளில்லை. கர்ப்பால் சிங்கும் நிக் அசிசும் மறைந்துவிட்டனர். அன்வார் ‘உள்ளே’ இருக்கிறார். வான் அசிசா பாட்டி பேரப் பிள்ளைகளை பார்க்கவே நேரம் போதவில்லை. லிம் கிட சியாங்கிற்கு சிங்கப்பூரில் உள்ள நான்கு ஹோட்டல்கள் போதவில்லையாம். லிம் குவான் எங், யாராவது குறைந்த விலையில் பங்களா விற்பார்களா என அலைந்துகொண்டிருக்கிறார். இந்திரா காந்தியை விட்டால் தம்பி குலசேகரனுக்கு பிழைப்பில்லை. ம்…ம்……எதிர்கட்சிகளுக்கு பழைய மெருகு, வருமா வராதா தெரியவில்லை