எதிர்வரும் கோலா கங்சார் இடைத் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறினால் எதிரணியின் பரப்புரைக்கு பார்டி சோசலிஸ் மலேசியா உதவப் போவதில்லை.
“மும்முனைப் போட்டி வேண்டாம் என்று (எதிரணிக் கட்சிகளிடம்) கூறி இருக்கிறோம்.
“அதற்கு மாறாக செயல்பட்டால் எங்கள் உதவி அவர்களுக்குக் கிடையாது”, என பிஎஸ்எம் தலைவர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் இன்று பிரிக்பீல்ட்சில் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
தம் தொகுதியான சுங்கை சிப்புட்டை அடுத்துத்தான் கோலா கங்சார் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
டாக்டர் ஜெயக்குமாரின் இந்த அறிக்கை, நன்கு சிந்தித்து வெளியிட்ட ஓர் அறிக்கை. எதிர்கட்சிகூட்டணியை உடைத்தெறியவேண்டும் என அல்தாந்துயா நஜிப் போட்ட திட்டம் நன்னாவே செயலாக்கம் காண்கிறது. டி.எ.பி. வயிறு வளர்க்க பினாங்கு இருந்தாலே போதும். அன்வாரின் விடுதலைக்கு பாடுபடுகிறது பி.கே.ஆர். பாஸ் கட்சிக்கு பதில் சொல்லிக் கொண்டே பிழைப்பு நடத்துகிறது அமானா. இப்போதெல்லாம் இவர்கள் எவரும் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை.
இல்லாத ஊருக்கு வழி கேட்டால் வழியைக் காட்டத்தான் முடியுமா என்ன?
இதுதான் பி.எஸ்.எம்-மின் குறைப்பாடு. ஏதாவது ஓரணியில் திரண்டு நின்றால் மட்டுமே பி.எஸ்.எம். கட்சி மேல்நிலை பெற முடியும். தனி மரம் மாந்தோப்பாகாது. பாஸ் கட்சி முன்னமே உங்களை கால் வாரி விட்டது. அப்புறம் அந்த கட்சியைப் பற்றி ஏன் நினைகின்றீர்கள்?
{இடம் : நாடாளுமன்ற கட்டிடத்தின் கழிவறை {toilet} ] நஜிப் : வாங்க லிம் கிட சியாங். எவ்வளவு நேரமா காத்திருப்பது லிம் : சீக்கிரமா சொல்லுங்க. யாராவது வந்திடப் போறாங்க நஜிப் : எல்லாம் ஒகே தானே! Sg.Besar, K K மும்முனை போட்டிதானே லிம் : ஆமா! சந்தேகமே வேண்டாம். அதற்குண்டான சண்டை, சச்சரவுகளை சரவாவில் செய்தது போலவே இங்கேயும், உள்ளுக்குள்ளேயே ஆரம்பிச்சு வச்சிட்டேன். நஜிப் : ஒகே! பல பேர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால்தான் என் கட்சி ஜெயிக்க முடியும். நேரடி போட்டி என்றால் என் கட்சி அவுட். காரியத்தை கச்சிதமா செஞ்சிடுவீங்க என்பது எனக்கு நல்லாவே தெரியும். உங்க மவன பத்தி கவலை படாதீங்க. வாக்குறுதிப் படி பங்களா விஷயத்தை ‘கவராப்’ பண்ணிடறேன்.
இப்படியே போனால் வரும் பொது தேர்தலில் எதிர் கட்சிகள் வெற்றிப் பெறுவது சிரமம் என்பது அவர்களுக்கு தெரியாதா…?
டாக்டர் ஜெயகுமார் பிரச்சனையை ஆழமாக ஆராயவில்லை ! மும் முனை போட்டியினால் பி. என் க்கு லாபமாக அமைந்து விடும் என அஞ்சுகிறார், அதற்காக பாஸுக்கு ஆதரவு தந்தோமானால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். பாஸுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல !
ஹூடுட் சட்டத்தை தை அமலாக்கம் செய்வதைத்தான் அக்கறை கொண்டுள்ளது.
உங்கள் இடத்தில எப்படி ,சுங்கை சிபுடில் எதிர் அனியீன் பிரச்சரம் வேண்டாமா ? போன தேர்தலில் PSRm அருட்செள்வனின் முதிகில் குத்திய PAS மறந்து விட்டிர்களா? செலங்கோரில் முஸ்லிம் இல்லாதவர்களை அரசாங்கத்தில் ஓரங் கட்ட முன்னால் menteri Besar Khalid இப்ராகிம் மற்றும் UMNO PAS சதிவலை பின்னாளைய ?
இடைதேர்தலில் முஸ்லீம் அல்லாதோர் வாக்களிக்காதீர்கள். மலாய்க்கார ஆளும் கட்சிகளுக்கும்/எதிர்கட்சிகளுக்கும் மலாய்க்காரர்களின் ஆதரவு எத்தனை சதவீதம் யாருக்கு என்று பார்ப்போம்.
வந்தவனும் சரி இல்லை,போனவும் சரி இல்லை,இருக்கிறவனும் சரி இல்லை,என்பதுபோல் எதிர்கட்சியை நம்புவதெற்கே அச்சமாய் இருக்கிறது