எதிர்வரும் இரு இடைத் தேர்தல்களிலும் பாஸ் கட்சி ஹூடுட் சட்டம் பற்றி பிரச்சாரம் செய்யும். இத்தொகுதிகளில் மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையில் இருக்கின்றனர் என்று பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் நிக் அப்டு நிக் அப்துல் அசிஸ் கூறுகிறார்.
இன்று பின்னேரத்தில் ஹூடுட் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் பாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு அம்னோவின் ஒத்துழைப்பு கிடைத்தது என்பதை ஒப்புக்கொண்ட நிக் அப்டு, அம்னோவின் ஆதரவு இல்லாமல் தனிப்பட்ட உறுப்பினரின் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றார்.
பாஸ் கட்சி ஹூடுட் விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். அம்னோவும்கூட இதில் கவனம் செலுத்தும் – அனைவரும் இதனைச் செய்வதற்கோ, செய்யாமல் இருப்பதற்கோ உரிமை உண்டு என்று அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதை உரிமையாகக் கோரவில்லை என்றும், இருதரப்புக்குமிடையில் ஒத்துழைப்பு இருந்து வருகிறது, ஆனால் அது பரஸ்பர நன்மைகள் குறித்த விவகாரங்களில் மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் இது பற்றி எப்போதும் தெளிவாகவே இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் மத்திய அரசோடு ஒத்துழைக்க முடியாது என்று எண்ணும் சிலர் இருக்கிறார்கள்.
“இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது பாஸ் கூறிவந்துள்ள அந்த மாதிரியான ஒத்துழைப்பைக் காட்டுகிறது என்று கூறிய நிக் அப்டு, முதன்முறையாக ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மசோதாவை அனுமதித்ததற்காக தைரியமிக்க அவைத் தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்”, என்றார்.
கசையடி தற்போதைய 5 லிருந்து 40க்கும் 100 க்கும் இடையில் அதிகரிக்க வேண்டும்
இந்த மசோதாவை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்தார். இது ஹூடுட் மசோதா என்று குறிப்பிடப்பட்டாலும் இது ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதி பரிபாலனம்) சட்டம் 1965 க்கு திருத்தங்கள் செய்வதாகும்.
சட்டம் 1965 இன் கீழ், ஷரியா நீதிமன்றங்கள் அதிகபட்சமாக ரிம5,000 அபராதம், மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ஆறு சவுக்கடி தண்டனை மட்டுமே வித்திக்க வகைசெய்கிறது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதா ஹூடுட் சட்டத்தின் மேற்கூறப்பட்ட வரம்பை உயர்த்தி அமலாக்கம் செய்ய விழைகிறது. எடுத்துக்காட்டு, கசையடி 40 லிருந்து 100 க்கும் இடையிலிருக்கும்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள ஏதுவாக இந்த மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டம் விவாதிக்கட்டும் என்று அப்துல்லா ஹாடி அவாங் பின்னர் கேட்டுக்கொண்டார்.
“பரஸ்பர நன்கொடையோடு” அம்னோவுடன் ஒத்துழைப்பு, பாஸ் ஒப்புக்கொள்கிறது இதுதான் அனைவரும் அறிந்ததே !
புதுசா ஏதும் இருந்தா சொல்லுங்க.
லஞ்சம் பெறுவோரை ஹுடுட் சட்டம் தற்காப்பதேன்? அதாவது எல்லாவித குற்றங்களுக்கும் தண்டனைகளை விதித்துள்ள இந்த சட்டம், கையூட்டு பற்றி எந்தவித குற்றவியல் சமாச்சாரங்களையும் இச்சட்டத்தில் புகுத்தப் படவில்லை என்பதால், உலகில் இஸ்லாம் மதத்தவரே அதிக லஞ்சம் பெறுகிறவர்கள், என்பதை இந்த ஹுடுட் காட்டிக் கொடுப்பது போல் தோன்றுகிறது. {Correct me if I am wrong}
லஞ்சம் இஸ்லாத்தில் ஹராம்,
1. லஞ்சம் வாங்குவதற்கு தடை
உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள! (திருக்குர்ஆன் 2:188)
இவ்வசனம் மூலம் பிறரின் பொருட்களை அடைய லஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ தவறு என சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே பொருளீட்டலில் இலஞ்சத்தைத் தவிர்க்கவேண்டும்.
எல்லாமே மத வெறி தான்– நியாயம் ஒன்று இருக்கிறது என்று தெரியாத ஈன ஜென்மங்கள். இவன்கள் பண்ணாத அநியாமா?
ஐயா arshad லஞ்சம் இந்து சமயத்தில் என்ன நல்லது என்றா சொல்லப்பட்டிருக்கிறது? இன்றைய அநியாயங்கள் எவ்வளவு அரங்கேற்றம் கண்டு கொண்டிருக்கின்றன? இதற்க்கு எல்லாம் மதம் தேவை இல்லாதது–பகுத்தறிவும் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதே தேவை. எதற்கு எடுத்தாலும் சமயத்தை காரணம் காட்டுவது எடுபடாது– தினசரி எத்தனை உயிர்கள் சமயத்தின் பெயரினால் பலிகொடுக்கப்படுகிறது?
இனம் இனத்தோடு,மதம் மதத்தோடு,வெறி வெறியோடுதானே சேரும் எல்லோரும் அறிந்த ஒன்றுதானே!