சுங்கை புசார் பாஸ் வேட்பாளர் ரானி ஓஸ்மான்

 

pascandidate1ஜூன் 18 இல் நடைபெறவிருக்கும் சுங்கை புசார் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளராக மெரு சட்டமன்ற உறுப்பினரான அப்துல் ரானி ஓஸ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஸ் கட்சியின் வேட்பாளராக ரானி ஓஸ்மானை அறிவித்த பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங், ரானி ஓஸ்மானின் உடம்பில் பஞ்சார் மற்றும் ஜாவா இரத்தம் ஓடுகிறது என்று தாம் அறிந்துகொண்டதாகவும், அனைவரும் ஆடாமின் மகன்கள் என்றும் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிபரப்படி, இத்தொகுதி வாக்காளர்களில் 67.18 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 31 விழுக்காட்டினர் சீனர்கள், 1.91 விழுக்காட்டினர் இந்தியர்கள் மற்றும் 0.23 விழுக்காட்டினர் இதர இனத்தவர்கள்.