கருத்துக்கணிப்பு: சுங்கை புசாரில் பிஎன்னுக்கே வெற்றி வாய்ப்பு

suppஜூன் 18-இல்  இடைத் தேர்தல்   நடைபெறவுள்ள  சுங்கை புசாரில்,  வாக்காளர்கள்  பிஎன்னை  அதிகம் ஆதரிப்பதாக தெரிகிறது.

இன்று  அங்கு  இடைத் தேர்தல்   நடந்தால்   44.75   விழுக்காட்டு   வாக்காளர்கள்    பிஎன்னுக்கு   வாக்களிப்பார்கள் என்பதை யுசிஎஸ்ஐ அண்மையில் அங்கு நடத்திய   கருத்துக்கணிப்பு    காட்டுகிறது.

இரண்டாவது  இடத்தில் பிகேஆர். அதற்கு 24.25 விழுக்காடு ஆதரவு உள்ளது.  13 விழுக்காட்டுடன் பாஸ் மூன்றாம் இடத்தில். பார்டி அமானா நெகராவுக்கு (அமானா) 4வது இடம்.