கடந்த ஓராண்டில் பாஸ் கட்சியிலிருந்து 200,000 பேர் விலகியிருப்பதாக அதன் தலைமைச் செயலாலர் தகியுடின் ஹசான் கூறினார்.
இன்று கோத்தா பாருவில் பாஸ் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய தகியுடின், கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஒரு மில்லியனைத் தாண்டியதாக அறிவித்தார். அதே வேளை 200,000 பேர் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பதாகவும் சொன்னார்.
கடந்த ஓராண்டில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. சிலர் உயிரிழந்தனர். சிலர் கட்சியிலிருந்து வெளியேறினர் என்றாரவர்.
“இப்போது 800,000 உறுப்பினர்கள் கட்சியில் இருக்கிறார்கள்”, என்று கூறிய அவர், புதிய உறுப்பினர்களையும் வாக்காளர்களையும் பதிவு செய்ய உதவுமாறு கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார்.
எதுக்கு அம்னோ வுக்கு ஜால்ரா போடறதுக்க. போங்கடா நீங்களும் உங்க கட்சியும் .
பச கொட்டை